Long Term Visit visa: சிங்கப்பூரில் SPass அல்லது EPassல் இருக்கும் ஊழியர்கள் தங்களது குடும்பத்தினை அழைத்து வர உதவியாக இருப்பது தான் Long term visit visa. இதை எப்படி அப்ளே செய்யலாம்? இதில் என்னென்ன டாக்குமெண்ட்ஸ் கேட்பார்கள் என்ற முழு விவரத்தினை தெரிந்து கொள்ள இதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்க.
Long Term Visit visa எப்போது அப்ளே செய்யலாம்:
*SPass அல்லது EPass வைத்து சிங்கப்பூரில் பணிபுரியும் ஊழியர்கள்
*மற்ற எந்த வருமானத்தினையும் சேர்க்காமல் சிங்கப்பூரில் நிரந்தர சம்பளமாக 6000 சிங்கப்பூர் டாலர் வாங்குபவர்கள்
*Singapore-registered நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்கள்
இந்த மூன்று கட்டுபாடுகளை கொண்டு இருந்தால் உங்கள் குடும்பத்தினை சிங்கப்பூருக்கு அழைத்து வர Long term visit விசா விண்ணப்பிக்க முடியும்.
இதையும் படிங்க: சிங்கப்பூர் கால் டாக்ஸி ஓட்டுனாலே ராஜா தானோ! 7 நாளுக்கு 5000 சிங்கப்பூர் டாலர் சம்பாரிக்கும் ஓட்டுநர்… நெட்டிசன்களை வாயடைக்க வைத்த புகைப்படம்!
யாருக்கு Long term visit அப்ளே செய்யலாம்:
*சட்டப்பூர்வமாக திருமணம் செய்த கணவன்/ மனைவி
*21 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட திருமணமாகாத ஊனமுற்ற குழந்தைகள்.
*21 வயதுக்குட்பட்ட திருமணமாகாத மாற்றான் பிள்ளைகள்.
*பெற்றோர் (குறைந்தபட்சம் $12,000 நிலையான மாதச் சம்பளம் பெறுபவர்களுக்கு மட்டுமே).
விசா அப்ளே செய்ய தேவைப்படும் டாக்குமெண்ட்ஸ்:
- கணவன்/மனைவிக்கு திருமண சான்றிதழ்
*சொந்த நாட்டு தூதரகத்திலிருந்து ஒரு கடிதம் - ஊனமுற்ற குழந்தையாக இருந்தால் மருத்துவரிடம் இருந்து அவர்களின் நிலை குறித்த கடிதம்
- மூத்த தாரத்து பிள்ளை என்றால் Custody கொடுத்த கோர்ட் ஆர்டர்
- குழந்தையை சிங்கப்பூருக்கு கொண்டு வருவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்று பெற்றோரின் கடிதம்.
- பெற்றோர்களுக்கு விண்ணப்பிக்கும் ஊழியரின் பிறப்பு சான்றிதழ். அதில் பெற்றோரின் பெயர்கள் இடம் பெற்று இருக்க வேண்டும்.
- பாஸ்போர்ட்
விண்ணப்பம் குறித்து review குறித்து அதற்கேற்ப மேலும் டாக்குமெண்ட்டுகள் கேட்கப்படலாம்.
கம்பெனி நிர்வாகம் அல்லது அதிகாரப்பூர்வ ஏஜென்சி மூலமாக தான் இதற்கு அப்ளே செய்ய முடியும். அப்ளே செய்யும் போது 105 சிங்கப்பூர் டாலர் கட்டணமாக கேட்பார்கள்.
இதையும் படிங்க: சர்ச்சையான சிங்கப்பூர் பொங்கல் போட்டி… திருவள்ளுவருக்கு காவி உடை? தமிழறிஞரான அவர் இந்துவா? சமணரா? மீண்டும் பற்றிய தீ!
அப்ரூவ் ஆனவுடன் 225 சிங்கப்பூர் டாலர் கட்டணமாக கேட்கப்படும். பெரும்பாலான அப்ளிகேஷன்கள் 3 வாரத்திற்குள் அப்ரூவ் செய்யப்பட்டு விடும். மற்ற பாஸ்களுக்கு போல சிங்கப்பூர் வந்தவுடன் MOMல் பதிவு செய்து கார்ட் வாங்கிக் கொள்ள வேண்டும்.