TamilSaaga

சிங்கப்பூரில் லட்சங்களில் சம்பளம் கொடுக்கும் EPass… அப்ளே செய்ய என்னென்ன டாக்குமெண்ட்ஸ்… இதை தெரிஞ்சிக்கோங்க முத!

சிங்கப்பூரில் வேலைக்கு சென்று லட்சங்களில் சம்பளம் வாங்க வேண்டும் என நீங்கள் நினைத்தால் அதற்காக கொடுக்கப்பட்டு வரும் பாஸ்களில் முதன்மையானது epass. ஏனெனில் இந்த பாஸினை விட அதிக சம்பளம் தரும் பாஸ்களும் சிங்கப்பூரில் இன்னும் நடைமுறையில் தான் இருக்கிறது. அதனால் முதுகலை டிகிரி படித்தவர்களோ அல்லது ஒரு டிகிரியில் சில வருடம் அனுபவம் வாய்ந்தவர்களும் இந்த பாஸுக்கு விண்ணப்பிக்க முடியும்.

Employement passஐ சுருக்கமாக epass என அழைப்பார்கள். இதற்கு விண்ணப்பிப்பவர்கள் கட்டாயம் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். முதுகலை பட்டம் படித்திருந்தால் அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். அடிப்படை சம்பளம் 4500 சிங்கப்பூர் டாலர் வரை கொடுக்கப்பட இருப்பதாக சிங்கை மனிதவளத்துறை தரப்பில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாஸில் சிங்கப்பூர் வேலைக்கு வரும் போது 1 முதல் 2 வருடம் செல்லுபடியாகும்.

இதையும் படிங்க: சிங்கப்பூருக்கு கிளம்பிட்டு இருக்கீங்களா?… புத்தாண்டில் இருந்து என்ன மாற்றம்?.. கையில் வைத்திருக்க வேண்டிய முக்கியமான Travel Documents என்னென்ன? இதை தெரிஞ்சிக்காம Flight ஏறாதீங்க!

EPassல் விண்ணப்பிக்கும் ஊழியர்கள் சமர்பிக்க வேண்டிய டாக்குமெண்ட்ஸ்:

  • ஊழியரின் தனிப்பட்ட விபரம் அடங்கிய பாஸ்போர்ட்
  • ஊழியரின் பெயரில் எதும் மாற்றம் இருந்தால் ஒரு விளக்கக் கடிதம் மற்றும் அது சம்மந்தப்பட்ட டாக்குமெண்ட்
  • படித்த படிப்பிற்கான சமர்பிக்க வேண்டிய சான்றிதழ்கள்
  • educational documentsல் நோட்டரி பப்ளிக் சான்று கொடுத்திருந்தால் அது ஏற்றுக்கொள்ளப்படாது.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் யாரெல்லாம் Class 3 லைசன்ஸ் எடுக்கலாம்? எப்படி எடுக்கணும்? அதுக்கு நீங்க என்ன செய்யணும்? இதை அப்படியே follow பண்ணுங்க

இதுமட்டுமல்லாமல் அந்தந்த துறைகளில் வேலைக்கு சேரும்போது குறிப்பிட்ட வேலைக்கு சான்று பெற வேண்டியது அவசியம்.

  • பல் மருத்துவராக சிங்கப்பூர் பல் மருத்துவ கவுன்சிலில் இருந்து Document
  • ரேடியோகிராஃபர் வேலைக்கு சேர Allied Health Professions கவுன்சில்
  • Doctorகள் சிங்கப்பூர் மருத்துவ கவுன்சில்
  • Unit for Prehospital Emergency Care-டம் இருந்து அவசர மருத்துவ டெக்னிசீயன்கள்
  • ஸ்போர்ட் சிங்கப்பூரில் இருந்து கால்பந்து வீரர் அல்லது பயிற்சியாளர் Document
  • வழக்கறிஞர் சட்ட சேவைகள் ஒழுங்குமுறை ஆணையத்திடம் இருந்து வாங்க வேண்டும்
  • செவிலியர் சிங்கப்பூர் நர்சிங் வாரியத்தில்
  • Occupational therapist, Physiotherapist, Radiation therapist, Speech therapist ஆகியோர் Allied Health Professions கவுன்சிலில் இருந்து சான்று சமர்பிக்க வேண்டும்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் பெற எங்களது முகநூல் பக்கத்தை Follow பண்ணுங்க”

Related posts