TamilSaaga

சிங்கப்பூரில் யாரெல்லாம் Class 3 லைசன்ஸ் எடுக்கலாம்? எப்படி எடுக்கணும்? அதுக்கு நீங்க என்ன செய்யணும்? இதை அப்படியே follow பண்ணுங்க

சிங்கை அரசின் விதிகளின்படி சிங்கப்பூர் வரும் 18 வயதுக்கு மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்கள் Dependent Pass மற்றும் Student Pass வைத்திருப்பவர்கள், சிங்கப்பூரில் செல்லுபடியாகும் வகுப்பு 3, 3A அல்லது 2B கொண்டு வெளிநாட்டு ஓட்டுநர் உரிமத்துடன், 12 மாதங்கள் வரை வாகனம் ஓட்டலாம். ஆனால் அதுவே 12 மாதங்களுக்குப் பிறகு சிங்கப்பூர் ஓட்டுநர் உரிமம் பெறவேண்டும்.

இதற்காக சிங்கப்பூரில் இருக்கும் லைசன்ஸ் சென்டர்களுக்கு அப்பாயிண்மெண்ட் எடுத்து சென்று அப்ளே செய்ய வேண்டும். முதலில் உங்களுக்கு BTT என அழைக்கப்படும் Basic Theory Test, எழுதி பாஸ் செய்ய வேண்டும்.

Bukit Batok Driving Centre
815 Bukit Batok West Ave 5, Singapore 659085
T – 1800 666 8888

ComfortDelGro Driving Centre
205 Ubi Ave 4, Singapore 408805
T – 6841 8900, 6848 0617

Singapore Safety Driving Centre
2 Woodlands Industrial Park E4, Singapore 757387
T – 6482 6060

மேற்கூறிய ஏதேனும் ஒரு மையத்தினை தேர்ந்தெடுத்து கொள்ளலாம். நீங்களே இந்த டெஸ்ட்டுக்கு தயார் ஆகி கொள்ளலாம். இல்லை இந்த சென்டர்களில் சென்றும் பயிற்சி எடுக்க முடியும்.

வீட்டில் இருந்து படிப்பவர்கள் டெஸ்ட்டுக்கு முன் ட்ரையல் டெஸ்ட் புக் செய்து எழுதி பாருங்கள். தொடர்ந்து BTT எழுதி பாஸ் செய்து விட்டீர்கள் என்றால் அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்.

இந்திய லைசன்ஸை சிங்கப்பூர் லைசன்ஸாக மாற்ற உங்களது பெர்மிட் 2 வருடமாக இருக்க வேண்டும். குறைந்த பட்சம் 13 அல்லது 14 மாதம் Validity இருக்க வேண்டும். இந்திய லைசன்ஸ், பெர்மிட் மற்றும் பாஸ்போர்ட் கொண்டு அப்ளே செய்யலாம். இதற்காக இந்தியன் எம்பசியில் அப்ளே செய்ய வேண்டும். அவர்கள் உங்களது சொந்த ஊரியில் செக் செய்து விட்டு லெட்டர் தருவார்கள். அதை வைத்து லைசன்ஸை மாற்றி கொள்ளலாம்.

மேலும் படிக்க – சிங்கப்பூரில் வேலைக்கு போக விரும்புபவரா நீங்க? மினிமம் $5000 டாலர் சம்பளத்தை அள்ளிக்கொடுக்கும் பாஸ் இது… நீங்க மிஸ் பண்ணவே கூடாத ஒரு விஷயமும் இருக்கு… இத படிங்க முதல!

சிங்கப்பூரிலேயே ட்ரைவிங் லைசன்ஸ் எடுக்க இருக்கிறீர்கள் என்றால் PDL (Provisional Driving License ) அப்ளே செய்து final theory test எழுத வேண்டும். இதற்கும் மினிமம் 2 ட்ரையல் டெஸ்ட் எழுதி பார்த்து கொள்ளுங்கள். இதே நேரத்தில் practical session போக வேண்டும். இதில் 3 வகுப்புகள் stimulator க்ளாஸ் இருக்க வேண்டும்.

இது நீங்கள் சிங்கப்பூரில் கார் ஓட்டும்போது என்னென்ன செய்ய வேண்டும் என்பதை சொல்லிக்கொடுக்கும்படி அமைந்திருக்கும். லைசன்ஸ் அப்ளே செய்யும் போது தொடக்கத்தில் செய்த enroll கணக்கு தான் ரொம்ப முக்கியம் என்பது குறிப்பிடத்தக்கது.

FTT பாஸ் செய்தவுடன் உங்களுக்கு மெயின் practical exam இருக்கும். அதில் 20 நிமிடங்களுக்கு மிகாமல் ஓட்டி காண்பிக்க கூறுவார்கள் அதில் பாஸ் செய்து விட்டால் லைசன்ஸ் 3 கிடைத்து விடும்.

இதில் இந்தியா லைசன்ஸை சிங்கப்பூர் லைசன்ஸ் 3c ஆக மாற்றியவர்கள். இதில் final theory test மட்டும் நீங்கள் எழுத தேவை இருக்காது. மற்றதை அனைத்தும் உங்களுக்கும் சிங்கப்பூரில் புதிய லைசன்ஸ் வாங்கியவர்களுக்கு இருக்கும் அதே விதி தான் என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts