Skill Test Centers in Singapore: வழக்கமாக கட்டுமான தொழிலுக்காக சிங்கப்பூருக்கு செல்ல வேண்டும் என்றால் இந்தியாவில் உள்ள ஏதாவது ஒரு திறன் வளர்ச்சி பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சி பெற்று, பிறகு டெஸ்ட் அடித்து, அதற்கு பிறகு தான் சிங்கப்பூருக்கு செல்ல முடியும். இந்த திறன் பயிற்சியை பெறுவதற்கு 5ம் வகுப்பு முடித்த, 18 வயதிற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். இவர்கள் வழக்கமாக சென்னை போன்ற பெரு நகரங்களில் இருந்து திறன் பயிற்சி மையத்தில் சேர்ந்து பயில வேண்டும். இங்கு இவர்கள் தரும் சான்றிதழ் சிங்கப்பூரில் 18 ஆண்டுகள் வரை பணியாற்றி செல்லுபடியாகும். அதன் பிறகு அந்த சான்றிதழை புதுப்பிக்க வேண்டும்.
ஆனால் இனி இந்தியாவில் டெஸ்ட் அடித்து விட்டு தான் சிங்கப்பூர் செல்ல வேண்டும் என்பது கிடையாது. சிங்கப்பூர் சென்று விட்டு, அங்கு சென்ற பிறகும் டெஸ்ட் அடித்துக் கொள்ளலாம். இதற்காக வழிகள் இதோ…
சிங்கப்பூரில் டெஸ்ட் அடிக்கும் முறை :
சிங்கப்பூரில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி மற்றும் டெஸ்ட் சென்டர்களில் CoreTrade Scheme, Multi-Skilling Scheme, Direct R1 Pathway ஆகிய மூன்று முறைகளில் திறன் பயிற்சி அளிக்கப்படுகிறது. முதல் பிரிவில் கட்டுமான அனுபவம் வாய்ந்த தொழிலாளர்களுக்கு சூப்பர்வைசர்களுக்கான பயிற்சி அளிக்கப்படும். இரண்டாவது பிரிவில் கட்டுமான துறையில் அனுபவம் வாய்ந்த தொழிலாளர்களுக்கு ஒன்றிற்கும் மேற்பட்ட வேலைகளில் பயிற்சி அளிக்கப்படும். மூன்றாவது பிரிவில் சிங்கப்பூரில் பணியாற்றிய அனுபவம் பெற்ற தொழிலாளர்களுக்கு திறனை மேலும் வளர்த்துக் கொள்வதற்கான பயிற்சி அளிக்கப்படும்.
இந்தியாவில் டெஸ்ட் அடிக்காமல் …சிங்கப்பூரில் உங்கள் திறமையை நிரூபித்து வெற்றி பெறுங்கள்!
டெஸ்ட் அடிக்க விண்ணப்பம் செய்வது எப்படி?
சிங்கப்பூர் அரசு, கட்டுமானத் துறையில் திறமையான தொழிலாளர்களை உருவாக்கும் பொருட்டு பல்வேறு பயிற்சி திட்டங்களை வழங்குகிறது. சிங்கப்பூரில் மட்டும் 26 அங்கீகரிக்கப்பட்ட திறன் பயிற்சி மையங்கள் உள்ளன. இந்த மையங்கள், கட்டுமானத் துறையில் தேவையான பல்வேறு திறன்களை வழங்குகின்றன. இந்த மையங்களில் சேர்ந்து பயிற்சி பெற்று, தேர்வு எழுதி சான்றிதழ் பெறலாம்.
பயிற்சி காலம் :
ஒரு நாள் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி முடிந்ததும் 4 முதல் 5 மணி நேரம் வரை செய்முறை சோதனைகள் நடத்தப்படும். இதனை முழுமையாக நிறைவு செய்யும் தொழிலாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். இந்த பயிற்சி பெற்றவர்களுக்கு மாதம் 1600 டாலர் என்ற குறைந்தபட்ச நிர்ணயிக்கப்பட்ட சம்பளத்துடன் தேவையான நிறுவனங்கள் மூலம் வேலை அளிக்கப்படும்.
சிங்கப்பூர் கட்டுமானத் துறையில் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி மையங்களின் பட்டியல்:
Access Solution Industry Association (previously known as Access & Scaffold Industry Association) | No 68 Woodlands Industrial Park E9, Singapore 757835 |
Active Fire Protection Systems Pte Ltd | 15 Yishun Industrial Street 1, #06-06/23/24 Singapore 768091 |
BS Technology Pte Ltd | 5 Tuas Ave 3, Singapore 639405 |
Deluge Fire Protection (S.E.A.) Pte Ltd | 21 Joo Koon Crescent, Singapore 629026 |
Fonda Global Engineering Pte Ltd | 45 Sungei Kadut Loop, Singapore 729495 |
Grace Electrical Engineering Pte Ltd | 103 Second Lok Yang Road, Singapore 628173 |
Huationg Contractor Pte Ltd | 3 Kranji Loop, Singapore 739539 |
James Contractor Pte Ltd | 26 Woodlands Industrial Park E1, Singapore 757744 |
JP Nelson Equipment Pte Ltd | 30 Benoi Road, Singapore 629900 |
Landscape Engineering Pte Ltd | 97 Pioneer Road, Singapore 639579 |
Ley Choon Constructions and Engineering Pte Ltd |
72A Sungei Kadut Street 1, Singapore 729373 |
Peck Brothers Construction Pte Ltd | 203 Kranji Road, Singapore 739481 |
Poh Wah Scaffolding & Engineering Pte Ltd | 61 Senoko Drive, Singapore 758238 |
P-One (S) Pte Ltd | 31 Mandai Estate #05-01 Singapore 729933 |
Positive Engineering Pte Ltd | 4 Gul Street 1, Singapore 629317 |
Progressive Builders Pte Ltd | 19 Bukit Batok Street 22, Singapore 659588 |
Santarli Construction Pte Ltd | 531 Yishun Industrial Park A, Singapore 768739 |
Setsco Services Pte Ltd | 531 Bukit Batok Street 23, Singapore 659547 |
Shingda Construction Pte Ltd | 10 Kranji Crescent, Singapore 728660 |
Singapore Glass Association | 9 Jurong Town Hall Road #03-04 Trade Association Hub Singapore 609431 |
Singapore Engineering & Construction Pte Ltd (previously known as Singapore Piling & Civil Engineering Pte Ltd) |
50 Changi South Street 1, BBR building, Singapore 486126 |
Teambuild Engineering & Construction Pte Ltd | 9 Defu South Street 1, Singapore 533844 |
Tiong Seng Contractors Pte Ltd | 63 Tuas South Avenue 1 Singapore 637282 |
Tritech Engineering & Testing (S) Pte Ltd | 31 Changi South Avenue 2, #02-05, Singapore 486478 |
இதை பயன்படுத்தி, நீங்கள் உங்களுக்கு நெருக்கமான பயிற்சி மையத்தைத் தேர்ந்தெடுத்து தொடர்பு கொண்டு கூடுதல் விபரங்களை பெற முடியும்.