TamilSaaga

சிங்கப்பூரில் வேலை.. எல்லா தொழிலிலும் தோல்வி.. மகனையும் பறிகொடுத்த பரிதாபம்.. ஆனால் இன்று லட்சத்தில் வருமானம் – தடைகள் பல தாண்டி வென்ற ஒரு “தாய்”

இந்த டிஜிட்டல் உலகில் Youtube என்ற ஒரு செயலி பலரின் வாழ்க்கையை தலைகீழாக மாற்றியுள்ளது என்று கூறினால் அது நிச்சயம் மிகையல்ல. அந்த வகையில் தனது 50 வயது வரை பல துன்பங்களை அனுபவித்து இன்று தனது 56வது வயதில் மாதம் 1.5 லட்சம் வரை சம்பாதித்து வரும் ஒரு உன்னத (தாயை) பெண்மணியை பற்றித்தான் காணவிருக்கிறோம்.

உங்களில் பலருக்கும் “அம்மா சமையல்” youtube சேனல் மீனாட்சி அவர்களை பற்றி தெரிந்திருக்கும், தனது குடும்ப வறுமை காரணமாக 5 வயது முதலே பல வீடுகளில் பாத்திரம் கழுவி தனது குடும்ப பாரத்தை சுமந்து வந்தவர் தான் மீனாட்சி. படித்து ஆசிரியராக அல்லது வக்கீலாக வரவேண்டும் என்ற ஆசை கொண்ட அவருக்கு 7ம் வகுப்புக்கு மேல் படிக்க வசதியில்லை.

16 வயதில் திருமணமாகி தனது கணவருடன் சென்னை வந்த அவருக்கு அந்த சோதனை காலம் தொடர்ந்துள்ளது. சிறிய வீட்டில் கணவருக்கு கிடைக்கும் கொஞ்ச வருமானத்தை கொண்டு வாழ்க்கையை நகர்த்த கஷ்டப்பட்ட மீனாட்சி பல இடங்களில் உணவு சமைத்து கொடுக்கும் வேலை செய்து வந்துள்ளார்.

ஊறுகாய் போட்டு விற்று, சமையல் செய்து, பல இடங்களில் பாத்திரம் கழுவி சேர்த்த பணத்தில் பல வியபாரம் துவங்க, அவை அனைத்திலும் தோல்வியே மிஞ்சியுள்ளது. இதற்கு இடையில் அவருக்கு இரண்டு மகன்கள் பிறக்க பாரம் அதிகரித்துள்ளது. தனது 50வது வயது வரை பல தொழில் செய்து அனைத்திலும் தோல்வியை மட்டுமே கண்டு வந்துள்ளார் மீனாட்சி.

ஏப்ரல் முதல் ஜூன் 2022 வரை.. S$370 மில்லியன் நிகர லாபம் ஈட்டிய Singapore Airlines – இந்திய பயணிகளின் பங்கும் இதில் இருக்கிறது!

இதற்கு இடையில் சமையல் வேலைக்காக சிங்கப்பூர் வந்து, இங்குள்ள தனது முதலாளிகளால் சரியாக நடத்தப்படாமல் இரண்டு மாதங்களில் தாயகம் திரும்பியுள்ளார் அவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தான் தனது மூத்த மகன் அளித்த யோசனையில் “அம்மா சமையல்” என்ற youtube சேனல் ஒன்றை துவங்கியுள்ளார்.

ஆனால் அது ஆரம்பிக்கப்பட்ட 4வது மாதத்தில் தனது மூத்த ஒரு விபத்தில் இறந்துபோக வாழ்க்கையே சூன்யமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் மீனாட்சி. இறுதியில் மனதை தேத்திக்கொண்டு தனது இளைய மகன் அளித்த உந்துதலால் அந்த youtube சேனலை தொடர்ந்து நடத்த முயற்சி செய்துள்ளார்.

ஏப்ரல் முதல் ஜூன் 2022 வரை.. S$370 மில்லியன் நிகர லாபம் ஈட்டிய Singapore Airlines – இந்திய பயணிகளின் பங்கும் இதில் இருக்கிறது!

இன்று 8 லட்சம் பேருக்கு மேல் அவரது சேனலை பின்தொடர்கின்றனர், மாதம் சுமார் 1 முதல் 1.5 லட்சம் வரை அவர் சம்பாதித்து வருகின்றார். youtube சேனல் மட்டுமின்றி தனது சமயல்திறனை வெளிப்படுத்தும் வகையில் மசாலா பொருட்களை அவரே தயார் செய்து உள்ளூர் மட்டுமின்றி 7 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றார் அவர்.

தனது இளைய மகன் தான் வீடியோ எடுக்கவும், மசாலா பொருட்களை உலக அளவில் விற்பனை செய்யவும் உதவி வருகின்றார். பல தொழில்கள் செய்து தோற்றுப்போய், மகனை இழந்து நின்ற நிலையிலும் மீண்டு எழுந்து இன்று தனது 56வது வயதில் தான் நினைத்த நல்லதொரு வாழ்க்கையை அவர் வாழ்ந்து வருகின்றார் என்றபோது உண்மையில் பலருக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாக அவர் திகழ்ந்து வருகின்றார் என்று தான் கூறவேண்டும்.

சம்பாதிப்பது ஒருபுறம் என்றால், தமிழக அளவில் “சிறந்த பெண்மணி” என்ற பல விருதுகளையும் தொடர்ச்சியாக வாங்கி குவித்து வருகின்றார் இந்த “தெய்வத் தாய்”.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts