TamilSaaga

“சிங்கப்பூர் கோமள விலாஸ்” : விரைவில் மேலும் சில கிளைகளை சிங்கப்பூரில் அமைக்க திட்டம் – முழு விவரம்

நமது சிங்கப்பூரில் உள்ள பல பிரபலமான இடங்கள் மற்றும் ஹோட்டல்களில் கோமள விலாஸ் சைவ உணவு விடுதியும் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. சிங்கப்பூரின் பழமையான இந்திய உணவகங்களில் ஒன்றான கோமலா விலாஸ் இன்றளவும் நமது சிராங்கூன் சாலையில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. லிட்டில் இந்தியாவின் கலாச்சார வளாகத்தில் அமைந்துள்ள கோமளா விலாஸ், புதிய வாழை இலைகளில் பரிமாறப்படும் தோசை, இட்லி, வடை மற்றும் பிரியாணி போன்ற பல சைவ உணவுகளுக்கு பெயர் பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒருமுறை அண்டை நாடான இந்திய பிரதமர் மோடி இங்கு வந்தபோது நமது பிரதமர் லீ மற்றும் அவரது மனைவி மோடியை இங்கு அழைத்துச்சென்று உணவருந்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது குணசேகரன் என்பவரால் நிர்வகிக்கப்படும் கோமள விலாஸ் தனது கிளைகளை சிங்கப்பூரில் மேலும் சில இடங்களில் விரிவுபடுத்த ஆவணம் செய்து வருகின்றது என்று குணசேகரன் கூறியுள்ளார்.

1936 ஆம் ஆண்டில், அவரது தாத்தா OM ராஜூ, இந்தியாவில் உள்ள தனது சொந்த ஊரான தமிழ்நாட்டில் இருந்து சிங்கப்பூர் வந்தார். அப்போது அவருக்கு வெறும் 16 வயதுதான், ஒரு இந்திய உணவகத்தில் வேலைக்குச் சேர்ந்தார். அவர் கடுமையாக உழைத்து முன்னேறினர். கடுமையான உழைப்பின் பலனாக 10 ஆண்டுகளில், அவர் ஒரு உணவகத்தை சொந்தமாக வாங்கும் அளவுக்கு சேமித்து தனது உணவகத்தை தொடங்கினர்.

முதன் முதலில் அவர் சிங்கப்பூர் வந்ததிலிருந்து தன்னை தாய் போல கவனித்துக் கொண்ட அவர் வேலை செய்த நிறுவனத்தின் உரிமையாளரின் மனைவிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கோமளா விலாஸ் என்று தனது கடைக்கு பெயர் மாற்றினார். சிங்கப்பூரில் கோமள விலாஸ் உணவகம் 1947ல் நிறுவப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. OM ராஜூ ஓய்வு பெற்ற பிறகு, குணசேகரனின் தந்தை ராஜூ குணசேகரன் தொழிலைக் எடுத்து நடத்த தொடங்கினர். அவர் கடந்த ஆண்டு தனது 68வது வயதில் காலமானார். அதன் பிறகு தற்போது குணசேகரன் உணவகத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளார்.

Related posts