TamilSaaga

“கல்லில் செதுக்கிய சிலைய விட கருவில் சுமந்த தாயை வணங்கு” – சிங்கப்பூரில் தற்கொலை செய்து கொண்ட கார்த்திக்கின் கலங்க வைக்கும் “முகநூல்” பதிவு

“டேய் கார்த்தி…. என்ன டா இது!? எல்லாம் எவ்வளவு ஜாலியா இருப்ப எங்க கூட.. இப்படி பன்னிட்டியே… ஆழ்ந்த இரங்கல்… மனம் ஏற்க மறுக்கிறது… இந்த சின்ன வயசுல ஏன் கார்த்தி?”

இது இந்த செய்தியின் தலைப்பு அல்ல. சிங்கப்பூரில் தற்கொலை செய்து கொண்ட இளைஞரின் நண்பர்கள் பதிவிட்ட முகநூல் பதிவு இது. அந்த அளவுக்கு பலருடைய மனங்களையும் ரணப்படுத்திவிட்டு கார்த்திக் எனும் ஊழியர்.

என்ன நடந்தது?

தமிழகத்தில் உள்ள புதுக்கோட்டை மாவட்டத்தின் அறந்தாங்கி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த செவிலியர் ஒருவர், கடந்த 10 வருடங்களாக சிங்கப்பூரில் வேலை செய்து வந்திருக்கிறார். இவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தான் சிங்கையில் இருந்து சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த ஆக.23 மாலை.. அதாவது செவ்வாய்க்கிழமையன்று மாலை, அந்த செவிலியரை அவரது உறவினர்கள் அனைவரும் அரக்க பறக்க மோட்டார் சைக்கிளில் தூக்கிக் கொண்டு அறந்தாங்கியில் உள்ள மருத்துவமனைக்கு சென்றிருக்கின்றனர். சிறிது நேரத்தில் மீண்டும் வீட்டுக்கே கொண்டு வந்து, அவசர அவசரமாக மயானம் கொண்டுச் சென்று உடலை தகனம் செய்துவிட்டனர்.

இந்த சம்பவம் நடந்த சில மணி நேரத்தில், சிங்கப்பூரில் வேலை செய்து வந்த அறந்தாங்கி புள்ளைவயல் கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா என்பவரின் மகன், தனது சமூக வலைத்தள பக்கத்தில்,

‘நாங்க ஒன்னு சேரப் போறோம். இனிமேல் எங்களை யாராலும் பிரிக்க முடியாது;
லவ் யூ ஆல், அவ்ளோ தான் எல்லாம் முடிந்தது.. பை’

என்று சில ஸ்டேட்டஸ்களை வைத்திருக்கிறார். இதைப்பார்த்து பதறிய அவரது நண்பர்கள், கார்த்திக்கை தொடர்பு கொள்ள முயற்சித்தும் முடியவில்லை. அவர் எங்கே இருக்கிறார் என்பது கூட தெரியவில்லை. அடுத்த சில மணி நேரத்தில் சிங்கப்பூரில் உள்ள தனது தாய் மாமாவுக்கு தான் இருக்கும் லொகேஷனை அனுப்பிவிட்டு, தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து, நண்பர்களுடன் சென்று பார்த்த கார்த்திக்கின் தாய்மாமா, உடனடியாக சிங்கப்பூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். விரைந்து வந்த சிங்கை போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இப்போது அவரது உடல் போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்டு, இன்று (ஆக.26) வெள்ளியன்று திருச்சி விமான நிலையம் கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், சிங்கப்பூர் போலீசார் மற்றும் கார்த்திக்கின் தாய்மாமா கொடுத்த தகவலின் அடிப்படையில், அறந்தாங்கி வட்டாட்சியர் உத்தரவின் பேரில் ஆமஞ்சி வட்ட கிராம நிர்வாக அலுவலர் மோகன், செவிலியர் இறந்ததாக கூறப்படும் கிராமத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டார். இதில், அப்பெண் மர்மமான முறையில் இறந்ததும், உடலை காவல்துறை மற்றும் வருவாய் துறைக்கு தகவல் சொல்லாமல் தகனம் செய்துவிட்டதும் தெரிய வந்தது.

இதையடுத்து, உடலை யாருக்கும் தெரியாமல் தகனம் செய்த அந்த இளம்பெண்ணின் தாய், அண்ணன், அக்கா மற்றும் உறவினர்கள் மீது ஆவுடையார்கோவில் காவல் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் மோகன் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

நண்பர்கள் வேதனை

இந்நிலையில், கார்த்திக்கின் நண்பர்கள் பலரும், அவரது திடீர் இழப்பை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர். பலரும் அவரது இழப்பு குறித்து தங்கள் வேதனைகளை பதிவிட்டு வருகின்றனர்.

“ஏண்டா தம்பி இப்படி பண்ண….
வாழ்றதுக்கு உனக்குதான் வாழ்க்கையில இடமில்லையா ஏண்டா இந்த அவசர முடிவு”

“இதயம் அழுகிறது அன்பு தம்பி ….
உன்னுடைய புன்னகை சிரிப்பை இனி எங்கடா நான் பாக்க போறேன் ஆழ்ந்த இரங்கலை தம்பி”

“ஆழ்ந்த இரங்கல்டா தம்பி 😢😢😢
எல்லா நேரத்திலும்
எல்லோரையும் சிரிக்க வைத்தனும் நீ
இப்போது
எல்லோரையும் கலங்க வைத்தவனும் நீயே”

“டேய் நம்ப முடியலடா…😰உன்ன சுத்தி இருக்கவங்கள சிரிக்கவச்சுட்டே இருப்பியேடா ..இப்போ எங்கள அழ வச்சுட்டு போய்டியே….😭😭 நீ கஷ்டப்பட்டதுலாம் இதுக்குதானாடா….
நம்ம முடியாத ஒரு இழப்பு….😭😭”

இப்படி இன்னும் நூற்றுக்கணக்கான அவரது நண்பர்களின் பதிவுகளை காண முடிகிறது. இதன் மூலம், எந்த அளவுக்கு நண்பர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும். இன்னும் சில நண்பர்கள், இவர் தற்கொலை செய்து கொண்ட செய்தியை கேட்டு, மோசமான திட்டியும் பதிவிட்டுள்ளனர்.

கார்த்திக்கை பொறுத்தவரை அன்புக்கும், பாசத்துக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பவராகவே தெரிகிறது. சமீபத்தில் அவரது முகநூல் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அது, “தீடீரென நடக்க பேச முடியாமல் போன காதலி தாய் போல் பார்த்துக்கொள்ளும் காதலன்” என்ற தலைப்பு கொண்ட நெகிழ வைக்கும் ஒரு உண்மையான காதலர்களைப் பற்றிய வீடியோ.

எல்லாவற்றுக்கும் மேல், இவர் தனது முகநூலில், தன்னைப் பற்றிய ‘intro’ கொடுக்க வேண்டிய இடத்தில் பதிவிட்டுள்ள வார்த்தைகள் என்ன தெரியுமா?

“கல்லில் செதுக்கிய சிலைய விட கருவில் சுமந்த தாயை வணங்கு🙏” என்பதே.

இவ்வளவு உன்னதமான ஒரு உயிர், தூக்கிலிட்டு தன் உயிரை தானே இவ்வுலகத்தை விட்டு விடுவித்துக் கொண்டது, ஏற்றுக் கொள்ளவே முடியாத ஒன்று.

இன்று (ஆக.26) கார்த்திக்கின் உடல், திருச்சி விமான நிலையம் கொண்டு வரப்பட்டு, அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படுகிறது.

Related posts