அமெரிக்க துணைத் ஜனாதிபதி கமலா ஹாரிஸ் இன்று ஆகஸ்ட் 22ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை சிங்கப்பூர் பயா லெபார் விமான நிலையத்திற்கு வந்திறங்கினார். இன்று காலை 10:50 மணியளவில் அவர் தரையிறங்கினார். வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், அமெரிக்காவிற்கான சிங்கப்பூர் தூதர் அசோக் குமார் மிர்புரி மற்றும் வெளியுறவுத்துறை நிரந்தர செயலாளர் சீவீ கியோங் உள்ளிட்டோர் அவரை வரவேற்றனர்.
கடந்த ஆகஸ்ட் 20ம் தேதி அன்று, வெளியுறவு அமைச்சகம் (MFA) ஆகஸ்ட் 23 முதல் ஆகஸ்ட் 24, 2021 வரை ஹாரிஸின் சிங்கப்பூர் வருகையை குறித்து அறிவித்தது. அவர் சிங்கப்பூர் வந்திருப்பது அவரது முதல் ஆசியாவிற்கான உத்தியோகபூர்வ பயணத்தை குறிக்கிறது. துணை ஜனாதிபதி அலுவலகம், தேசிய பாதுகாப்பு கவுன்சில் மற்றும் வெளியுறவுத் துறை உயர் அதிகாரிகளுடன் அவர் இந்த பயணத்தில் உரையாற்றுவார்.
MFA செய்திக்குறிப்பில் அவர் ஜனாதிபதி ஹலிமா யாக்கோப்பை சந்திப்பார் என்றும், பிரதமர் லீ சியன் லூங்குடன் ஒரு சந்திப்பு மற்றும் கூட்டு செய்தியாளர் சந்திப்பு இருப்பதாகவும் கூறுகிறார்கள். அமெரிக்காவின் முதல் பெண் துணைத் தலைவருக்கு இஸ்தானாவில் ஒரு விழாவின் போது அவரது நினைவாக ஒரு புதிய ஆர்க்கிட் மலர் பெயரிடப்பட்டது.
CNA செய்திகளின்படி, ஹாரிஸ் ஆகஸ்ட் 24 அன்று சிங்கப்பூரில் இருந்து வியட்நாமிற்கு பயணம் செய்து ஆகஸ்ட் 26 அன்று பிராந்தியத்தை விட்டு வெளியேறுவார்.