TamilSaaga

சிங்கப்பூர் மற்றும் மலேசிய போலீசின் கூட்டுமுயற்சி – வேலை சம்மந்தமான மோசடியில் ஈடுபட்ட கும்பல் சிக்கியது

சிங்கப்பூர் போலீஸ் படையான (SPF) மற்றும் ராயல் மலேசியா காவல்துறை (RMP) ஆகியவை மேற்கொண்ட ஒரு கூட்டு நடவடிக்கையில், மலேசியாவின் ஜோகூரில் அமைந்துள்ள ஒரு பன்னாட்டு வேலை மோசடி குழுவை கண்டறிந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூரில் பதிவான 188க்கும் மேற்பட்ட வேலை சமந்தமான மோசடிகளுக்கு இந்த மோசடி குழு தான் பொறுப்பு என்று நம்பப்படுகிறது. மேலும் இந்த குழுவால் பாதிக்கப்பட்ட மக்கள் சுமார் 1.35 மில்லியன் வெள்ளி அளவு பணத்தை ஏமர்ந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

சிங்கப்பூர் போலீஸ் படை வெளியிட்ட அறிக்கையில் SPFன் வணிக விவகாரத்துறை (சிஏடி) ஆர்எம்பியின் வணிக குற்ற புலனாய்வுத் துறையுடன் (சிசிஐடி) தகவல்களைப் பகிர்ந்து கொண்டது. இதற்கு பிறகு ஜொகூரில் சோதனைகள் மற்றும் கைதுகளை நடத்தியுள்ளது. இந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து வேலை சம்மந்தப்பட்ட மோசடிகளால் பாதிக்கப்பட்ட உள்ளூர்வாசிகளின் அறிக்கைகள் அதிகரிப்பதை கவனித்ததாக SPF தெரிவித்துள்ளது.

இந்த மோசடி சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் வெவ்வேறு சமூக ஊடக தளங்கள் அல்லது பிற பயன்பாடுகளில் விரைவான பணத்தை வழங்கும் வேலை விளம்பரங்களை வெளியிடுவார்கள். இந்த வேலைக்கு அப்ளை செய்ய நினைப்பவர்கள் பொருட்களை ஆர்டர் செய்வதன் மூலம் ஆன்லைன் தளங்களின் விற்பனையை அதிகரிக்க உதவ வேண்டும்.

அதன் பிறகு, மோசடி செய்பவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு பணத்தை மாற்றுவதன் மூலம் பொருட்களுக்கு பணம் செலுத்துமாறு அறிவுறுத்துவார்கள். பதிலுக்கு, பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்கள் செலுத்திய தொகை மற்றும் 5% முதல் 12% வரை கமிஷன்கள் திருப்பித் தரப்படும் என்று உறுதியளிக்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த மோசடி கும்பலை பிடிக்க சிங்கப்பூர் மற்றும் மலேசிய போலீஸ் விரைந்தும் இணைந்தும் செயல்பட்டு இந்த குமபலை பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சதேகத்திற்க்கு இடமான அழைப்புகள் மற்றும் குறுந்செய்திகள் வந்தால், பொதுமக்கள் 1800-722-6688 என்ற மோசடி எதிர்ப்பு உதவி எண்ணை அழைக்கலாம்.

Related posts