TamilSaaga

“ஒரு நாயகன் உதயமாகிறான்” – WWE-யில் களமிறங்கும் முதல் சிங்கப்பூரர் சீன் டான்

அமெரிக்காவின் பிரபல WWE நிறுவனத்தில் சேர்ந்திருக்கும் முதல் சிங்கப்பூரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் 25 வயதுடைய சீன் டான். அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் நடத்தப்படும் பயிற்சிகளுக்கு ஆசியாவில் இருந்து சென்ற குழுவின் சீனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது WWE நிறுவனம். தன் மீது நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பை கொடுத்த அனைவருக்கும் தனது மனமார்ந்த நன்றிகளை தான் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் தங்களது கனவை நினைவாக்க துடிக்கும் அனைவருக்கும் தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார். சிங்கப்பூரின் முன்னாள் “தென்கிழக்காசிய வெற்றியாளர்” என்ற பட்டமும் அவரை சேரும் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஹாங்காங்கில் WWE தகுதி போட்டிகள் நடத்தியது குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூர், சீனா, ஹாங்காங், தைவான், பிலிப்பைன்ஸ் மற்றும் தாய்லாந்து நாட்டில் இருந்து இந்த போட்டிகளில் 40 வீரர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் சிங்கப்பூரில் இருந்து சீன் உட்பட மூன்று போட்டியாளர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts