சிங்கப்பூரில் தனது வீட்டுப் பணியாளரை இடுப்பில் உதைத்து, துணிகளை உலர்த்த பயன்படும் Hangerகளை கொண்டு அவை உடையும் வரை அடித்து துன்புறுத்திய 35 வயது பெண்ணுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 28) அன்று நீதிமன்றத்தில் ஏழு வார சிறை தண்டனை விதிக்கப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட வாங் சியாஹோய் என்ற அந்த பெண்மணி கடந்த மே மாதம் தானாக முன்வந்து காயத்தை ஏற்படுத்திய ஒரு குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இழப்பீடாக அந்த பணிப்பெண் திருமதி. என்கோ சபாலுக்கு 2000 வெள்ளியை வாங் அளித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து வாங்கைப் பரிசோதித்த ஒரு மனநல மருத்துவர், அவர் அந்த குற்றங்களில் ஈடுபட்டபோது, பெரிய மனச்சோர்வுக் கோளாறால் அவதிப்பட்டு வந்ததாக கூறியுள்ளார். இது அவரது செயல்களின் மீதான சுய கட்டுப்பாட்டை மிதமான அளவில் பாதித்தது என்றும் மருத்துவர் தெரிவித்தார்.
இந்நிலையில் வாங்கிற்கான 18 மாத கட்டாய சிகிச்சை உத்தரவின் பரிந்துரையை மாவட்ட நீதிபதி மே மெசெனாஸ் நிராகரித்தார். வழக்கமான கோட்பாட்டு கட்டமைப்பிலிருந்து விலகுவதற்கு அவளது கோளாறு போதுமானதாக இல்லை என்று கூறினார். இசை ஆசிரியராகப் பணிபுரியும் அந்த சிங்கப்பூரர், தனது இரண்டு குழந்தைகளின் பராமரிப்புக்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியிருப்பதால், ஒரு மாதத்தில் தனது சிறைத் தண்டனையை அனுபவிக்கத் தொடங்குவார் என்று இன்று கூறினார்.
25 வயதான மியான்மர் நாட்டவர் மார்ச் 2019ல் வாங்கின் வீட்டுக்கு வேலை செய்யத் தொடங்கினார் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.