TamilSaaga

வெளிநாட்டு ஊழியர்கள் ரொம்ப தூரம் நடக்குறாங்க.. சைக்கிள் நன்கொடை கொடுக்கலாமே! – சிங்கை மக்களுக்கு Itsrainingraincoats அழைப்பு – நல்ல மனசு!

புலம்பெயர்ந்த தொழிலாளர் நலக் குழுவான Itsrainingraincoats, இங்குள்ள தொழிலாளர்கள் சிலர் அலுவலகம் செல்ல நெடுந்தூரம் நடந்து செல்வதைத் தவிர்க்க, தங்களின் சைக்கிள்களை வழங்குமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள பதிவில், “சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு தொழிலாளர்கள் சில சமயங்களில் தங்களுடைய தங்குமிடங்கள் அல்லது பணியிடங்கள் மற்றும் அருகிலுள்ள பொது போக்குவரத்து நிறுத்தங்களுக்கு இடையே நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டியிருப்பதால் சைக்கிள் தேவைப்படுகிறது” என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும் அந்த பதிவில், “பைக்குகள் அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், ஆனால் ஒரு நாளைக்கு $18 என்ற சம்பளத்தில் புதிய பைக்குகளை அவர்களால் சரியாக வாங்க முடியாது என்பதால் சைக்கிள்கள் சேகரிக்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க – சிங்கப்பூர் வரும் வெளிநாட்டு ஊழியர்கள் கவனத்திற்கு.. ஏஜென்ட் உண்மையில் உங்கள் வேலைக்கு விண்ணப்பித்துள்ளாரா? Passport எண் மட்டுமே வைத்து கண்டறிவது எப்படி?

நன்கொடையாக வழங்கப்படும் சைக்கிள்கள்:

adult men ஓட்டும் அளவுக்கு பெரியதாக இருக்க வேண்டும்
சைக்கிள் நல்ல கண்டிஷனில் இருக்க வேண்டும்
பூட்டுகளுடன் சைக்கிள் கொடுக்க வேண்டும்
“ஹெல்மெட்களை வழங்க முடிந்தால் அது இன்னும் சிறந்தது” என்று அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

உதவி புரிய விரும்புவோர் Itsrainingraincoats முகநூல் பக்கத்தை அணுகலாம்.

வழக்கறிஞரும் புலம்பெயர்ந்த தொழிலாளர் வழக்கறிஞருமான தீபா சுவாமிநாதனால் 2015 ஆம் ஆண்டு Itsrainingraincoats நிறுவப்பட்டது. இந்த அமைப்பு புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஆடை, உணவு, விளையாட்டு உபகரணங்கள், மருந்துகள் மற்றும் ரெயின்கோட் போன்ற பல உதவிகளை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts