இத்தாலி ரோம் நகரில் ஜீ20 சுகாதார அமைச்சர்களின் கூட்டமானது இன்று துவங்கி நாளையும் நடைபெற உள்ளது.
சிங்கப்பூர் சார்பாக சுகாதாரத் துறை அமைச்சர் ஓங் யி காங் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளார். இந்த கூட்டத்தில் பிற 19 நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியமும் கலந்துகொண்டுள்ளது.
இந்த கூட்டத்தில் கெளரவ நாடு என்ற ஒரு நிலையில் சிங்கப்பூர் கலந்துகொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கூட்டத்தில் இதை தவிர பல்வேறு நாடுகள் கலந்துகொள்கின்றன. அவற்றிற்கு எல்லாம் இத்தாலி தனது ஜீ20 சுகாதார அமைச்சர்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுதிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கூட்டத்தில் உலகளாவிய சுகாதார பிரச்சனைகள் அதன் தீர்வுகள், உலகை உலுக்கும் கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் எதிர்கால தொற்று தடுப்பு நடவடிக்கைகள், தடுப்பூசி உற்பத்தி மற்றும் செலுத்துவது போன்றவை தொடர்பாக கருத்துக்கள் பரிமாரப்பட்டு ஆராயப்படும்.
இந்த கூட்டத்தில் பங்கேற்கும் நமது சிங்கப்பூர் அமைச்சர் ஓங் மற்ற நாட்டு சுகாதார அமைச்சர்களை சந்திப்பார் எனவும் அவருடன் மூத்த அதிகாரிகள் இருப்பார்கள் எனவும் கூறப்படுகிறது.