உலக அளவில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகள் ஏற்றுக்கொள்ளமுடியாது ஒன்றாக மாறி வருகின்றது. அந்த வகையில் வெளிநாட்டவர் ஒருவரின் காதல் வலையில் சிக்கி தனது வாழ்க்கையை இழந்து தவித்து வருகின்றார் சிங்கப்பூரை சேர்த்த பெண் ஒருவர். அவருடைய அடையாளத்தை வெளியிட சிங்கை அரசு மறுத்துள்ளது.
கத்தார் நாட்டில் உள்ள ஒரு பணக்கார குடும்பத்தைச் சேர்த்தவனைப்போல தன்னை கட்டிக்கொண்டு, டிண்டர் செயலி மூலம் சந்தித்த சிங்கப்பூர் பெண்ணை, பாலியல் தொழிலுக்காக துபாய்க்கு கடத்திச் சென்றதாக ஒரு இத்தாலிய நபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அந்த நபர், கத்தாரில் அந்த சிங்கை பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக நடித்து, இறுதியில் அந்தப் பெண்ணை துபாயில் பாலியல் தொழிலில் ஈடுபட வற்புறுத்தி, பாலியல் ரீதியாக பரவும் நோய் (STD) அவரை பாதிக்கும் வரை அவரால் கிடைத்த வருவாயை தன்வசம் வைத்துள்ளார்.
வெளியான குற்றப்பத்திரிகைகளின்படி, நேற்று ஆகஸ்ட் 22ம் தேதி “மனித கடத்தல் தடுப்புச் சட்டத்தின்” கீழ் 31 வயதான அக்ரஃப் அர்ஜௌய் என்ற இத்தாலி நாட்டவர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அர்ஜௌய் கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதத்தில் தான் சிங்கப்பூருக்கு வந்துள்ளார். இங்கு வந்து ஒரு மாதத்திற்குப் பிறகு டின்டரில் அந்தப் பெண்ணைச் சந்தித்துள்ளார்.
அர்ஜௌய் தன்னை ஒரு பணக்கார கத்தார் குடும்பத்தை சேர்ந்தவர் என்றும், கத்தார் ஏர்வேஸின் விமானி என்றும் கூறியுள்ளார். மேலும் இந்த நாட்டில் ஒருவரை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும் கூறியுள்ளார். ஒரு கட்டத்தில் அந்தப் பெண்ணை கத்தார் நாட்டுக்கு வந்து தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டுள்ளார்.
மேலும் தன்னை திருமணம் செய்துகொள்ள விருப்பமில்லை என்றால் உடனடியாக தங்களுடைய உறவை முறித்துக் கொண்டு தன்னுடைய நாட்டுக்கு தான் திரும்பி செல்ல உள்ளதாக உளவியல் ரீதியாக அந்த பெண்ணை மிரட்டி இருக்கிறார். ஒரு கட்டத்தில் அவரை திருமணம் செய்துகொள்ள ஒப்புக்கொண்டு அவருடன் இணைந்து துபாய் நாட்டிற்கு சென்றிருக்கிறார் அந்த பெண்.
ஆனால் அங்கு சென்ற பிறகு கத்தார் நாட்டிற்கு தன்னோடு இணைந்து செல்வதற்கு அந்நாட்டு அரசாங்கத்திற்கு சுமார் 12,800 சிங்கப்பூர் டாலர்களை கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அந்த பெண்ணிடம் அவ்வளவு பணம் இல்லை என்பதையும் அவர் அறிந்திருக்கிறார். இந்த சூழலில் தான் “நீ என்னோடு கத்தார் நாட்டிற்கு வந்து வாழ வேண்டும் என்றால் நான் சொல்வதைப் போல பாலியல் தொழிலில் ஈடுபட்டால், நல்ல முறையில் சம்பாதிக்கலாம். அந்த பணத்தைக் கொண்டு நாம் கத்தார் நாட்டிற்கு சென்று சந்தோஷமாக வாழலாம்” என்று கூறியுள்ளார்.
ஆனால் அந்த சிங்கை பெண் முதலில் இந்த விஷயத்திற்கு மறுத்த நிலையில் உன்னுடைய எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் இதை நீ செய்துதான் ஆக வேண்டும் என்று கூறி அவரை இறுதியில் ஒப்புக்கொள்ள வைத்திருக்கிறார். அவருடைய புகைப்படங்களை எடுத்து மே 2021 வாக்கில் அவருக்கென ஒரு ப்ரொபைல் உருவாக்கி பாலியல் தொழில் அவரை ஈடுபடுத்த தொடங்கியுள்ளார்.
சிங்கை வானை சிவப்பாக மாற்றப்போகும் Blood Moon – எப்போது பார்க்கலாம்?
கிட்டத்தட்ட ஐந்து மாத காலங்கள் இந்த நரக வேதனையை அந்த பெண் அனுபவித்து வந்த நிலையில், 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அந்த பெண்ணுக்கு பாலியல் ரீதியான நோய்கள் வந்திருக்கிறது. இந்த சூழலில் அந்தப் பெண்ணின் தாய் கொடுத்த புகாரின் பேரில் நவம்பர் 2021ல் அப்பெண் சிங்கப்பூருக்கு திரும்பி வந்தார். தற்பொழுது அந்த இத்தாலி நாட்டு நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றது.