சிங்கப்பூரில் இதெல்லாம் நடக்குமா என யோசிக்க முடியாது அளவில் நடந்த ஒரு குற்றத்தின் தண்டனை சமீபத்தில் கொடுக்கப்பட்டு இருக்கிறது. தங்கள் மனைவிகளுக்கு மயக்கம் மருந்து கொடுத்ட்ய்ஹு மாற்றி பாலியல் வன்புணர்வு செய்த நான்கு ஆண்களுக்கு 13.5 முதல் 22 வருட சிறை தண்டனை கொடுக்கப்பட்டு இருக்கிறது.
மேலும் அவர்களுக்கு 20 சவுக்கடிகளும் கொடுக்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒருவர் மட்டும் 50 வயதை கடந்தவர் என்பதால் அவரை தவிர மற்ற மூவருக்கு இந்த தண்டனை கொடுக்கப்பட இருக்கிறது. இதில் 45, 53 மற்றும் 45 வயதுடைய மூன்று ஆண்களுக்கு விசித்திரமான ஒரு ஆசை வந்திருக்கிறது. தங்கள் மனைவிகளை பிறரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது தான்.
அதற்கான ஆண்களை கண்டுபிடித்து அவர்களுக்கு தங்கள் துணை மீது ஆசைக்காட்டினர். இதை மனைவிகள் அறியாமல் பார்த்துக்கொண்டனர். பின்னர் ஒருநாளில் அவர்களுக்கே தெரியாமல் மயக்கம் மருந்து கலந்து தான் தேர்வு செய்த ஆணை வைத்து அவர்களை பாலியல் வன்புணர்வு செய்து சித்திரவதை செய்திருக்கின்றனர். அதிலும், அந்த நிகழ்வை படம் பிடித்து வேறு சில ஆண்களுக்கு பகிர்ந்துள்ளனர்.
SammyBoy என்ற ஆன்லைன் போரம் மூலம் மனைவியை பகிர்ந்து கொள்ள ஆண்களை தேடி இருக்கின்றனர். மேலும் மற்ற ஆண்களை ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்தினர். இது தொடர்கதையாக 2017ம் ஆண்டில் இருந்து நடந்து வந்து இருக்கிறது.
இது அந்த மனைவிகளுக்கு தெரியாமல் இருக்க கடுமையான மயக்க மருந்தையே பயன்படுத்தி வந்தனர். இதனால் தங்கள் கணவர்கள் குறித்து அவர்களுக்கு பெரிதாக தெரியவில்லை. கடந்த 2020ம் ஆண்டு ஒரு நாள் இம்மூவரின் மனைவியில் ஒருவர் தன்னுடைய தகாத படத்தினை கணவரின் மொபைலில் காண்கிறார். இதை தொடர்ந்தே மனைவியை மாற்றக்கொண்ட இந்த பிரச்சனை வெளியுலகிற்கு தெரியவந்தது. பாதிக்கப்பட்ட மனைவிகளின் எதிர்காலத்தினை கணக்கில் கொண்ட கணவர்களின் பெயர்கள் வெளியிடப்படவில்லை.
இதன் தீர்ப்பில் நீதிபதியே இது மிகவும் விசித்திரமான வழக்காக இருக்கிறது எனக் குறிப்பிட்டு இருந்தார். இதை தொடர்ந்து இவர்களுக்கு 22 வருட சிறை தண்டனையும், 20 சவுக்கடிகளும் வழங்கப்பட்டுள்ளது.