TamilSaaga

அதிகரிக்கும் பயங்கரவாத அச்சுறுத்தல்.. சிங்கப்பூர் பாதுகாப்பு பிரிவு அறிக்கை

சிங்கப்பூர் பாதுகாப்பு பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில்
கொரோனா நோய் தொற்று கால கட்டத்தில் பயங்கரவாத அமைப்புகளின் சேயல்களில் தோய்வும் பின்னடைவும் காணப்பட்டாலும் இணையதளம் வழியாக குறிப்பாக சமூக வலைத்தளங்கள் மூலம் பிரச்சாரம் செய்து தங்கள் அமைப்புகளுக்கு ஆட்களை சேர்க்கும் பணிகளை செய்து வருகிறார்கள் .

சிங்கப்பூரில் தொடர்ந்து பயங்கரவாத அச்சுறுத்தல் செயல்கள் அதிகரித்த வண்ணமே காணப்படுகிறது. எனினும் இந்த சூழலில் எந்த வித பயங்கரவாத தாக்குதலும் நடப்பதற்கான தகவல்களோ அறிகுறிகளோ ஆதாரப்பூர்வமாக இல்லை .

சிங்கப்பூரில் காணப்படும் பயங்கரவாத மிரட்டல்கள் எல்லாம், பயங்கரவாத சித்தாந்த ரீதியிலான இணையவழி பிரச்சாரங்களை கண்டு அதனால் கவரப்பட்டு செல்லும் தனி நபர்களின் செயல்களாகவே காணப்படுகிறது.

ஏற்கனவே கடந்த 2015ஆம் ஆண்டு பயங்கரவாத செயல்களில் சந்தேககிக்கப்படும் 54 நபர்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தடுக்கப்பட்டனர் . அதில் சுமார் 44 பேர் தீவிரவாத சித்தாந்தங்களால் ஈர்க்கப்பட்டு அதில் சேர்ந்தவர்கள் . சிங்கப்பூரை சேர்ந்த 32 நபர்கள் மற்றும் 3 இந்தோனீசியர்கள் 9 பங்களாதேஷை சேர்ந்தவர்களும் பட்டியலில் அடங்குவர்.

இந்த தகவல்களை உள்துறை பாதுகாப்பு பிரிவு இன்று வெளியிட்ட பயங்கரவாத அச்சுறுத்தல் மதிப்பீட்டு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related posts