SINGAPORE TAMIL NEWS: தமிழ்நாட்டில் இருந்து சிங்கப்பூர் வேலைக்காக செல்ல பல வழிகள் இருக்கிறது. இதில் இருக்கும் சாதகம் மற்றும் பாதகத்தினை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். தமிழ் சாகா தளத்தில் singapore job vacancy குறித்து தொடர்ச்சியாக பல விபரங்கள் கூறப்பட்டு வருகிறது.
சிங்கப்பூரில் வேலைக்காக கோட்டா வழங்கிய பல தமிழர்கள் வராமல் இருந்தனர். இதனால் கோட்டா பேப்பர் அளவில் மட்டுமே நிரம்பிய நிலையில், வேலைக்காக யாரும் சிங்கப்பூருக்கு வரவில்லை. இதை தொடர்ந்து அவர்கள் சிங்கப்பூர் வரட்டும் அப்புறம் கோட்டாவை ரிலீஸ் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இதனால் கோட்டா நிறுத்தப்பட்டது.
இதை தொடர்ந்து பலரும் சிங்கப்பூரில் தான் டெஸ்ட் என இன்னும் பல தகவல்கள் கிசுகிசுக்கப்பட்டது. இருந்தும் இன்று வரை MOM தரப்பில் இருந்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை.
இதையும் படிங்க: சிங்கப்பூரில் 2023ம் ஆண்டின் பொது விடுமுறை தினங்கள் என்னென்ன? முழு பட்டியலினை தெரிந்துக்கணுமா இத படிங்க
இருந்தும் சிங்கப்பூரில் டெஸ்ட் அடிக்கும் போது எப்படி வழிமுறைகள் இருக்கும். என்னென்ன சாதகங்கள் இருக்கும். பிரச்னைகள் இருக்கும் என்பதை தெரிந்துக்க இதை தொடர்ந்து படிங்க.
pcm permit அல்லது வொர்க் பெர்மிட்டில் சிங்கப்பூர் வந்து டெஸ்ட் அடிப்பதை தான் பலரும் அதிகமாக செய்கிறார்கள். சிலர் TWP அல்லது TEP பாஸில் வந்து டெஸ்ட் அடிக்கலாமா என்ற சந்தேகம் இருக்கும். அதற்கு ஒரே பதில் உங்களின் கம்பெனி தான் அதற்கு ஒப்புக்கொள்ள வேண்டும். அவர்கள் ஓகே சொன்னால் உங்களால் டெஸ்ட் அடிக்க முடியும்.
சிங்கப்பூரில் skilled டெஸ்ட் 3 நாட்கள் தான். ஆனால் தமிழ்நாட்டில் நீங்க அடிக்கும் போது 45 முதல் 60 நாட்கள் எடுக்கும். சிங்கப்பூரில் முதல் நாள் தியரி க்ளாஸ், இரண்டாவது நாள் பிராக்டிக்கல், மூன்றாவது நாள் டெஸ்ட் அடித்து விடலாம்.
வொர்க் பெர்மிட், பாஸ்போர்ட் ஜெராக்ஸ் இருந்தாலே போதும். ஒரிஜினல் தேவைப்படாது. இதை தவிர வேறு டாக்குமெண்ட்டுகள் தேவைப்படாது. $900 சிங்கப்பூர் டாலரில் இருந்து $1200 சிங்கப்பூர் டாலர் வரை கோர்ஸ்கள் இருக்கும். நீங்கள் தேர்வு செய்வதை வைத்து ஃபீஸ் மாறுபடும்.
தமிழ்நாட்டில் டெஸ்ட் அடிப்பதை விட கம்மி ஆகிவிடும். அதைப்போல டெஸ்ட் பிராஜக்ட் ரொம்பவே சிம்பிளாக இருக்கும். சிங்கப்பூருக்கு ஒரு வொர்க் பெர்மிட்டில் வருவதற்கே 2 லட்சம் வரை செலவாகும். அதை தொடர்ந்து Skilled டெஸ்ட் அடிக்கும் போது உடனே 1 லட்சம் வரை செலவு செய்வது சிலருக்கு கஷ்டமாக இருக்கும்.
கம்பெனியில் லீவ் கிடைப்பதும் கஷ்டமாக இருக்கும். இதனால் சிங்கப்பூரில் டெஸ்ட் அடிப்பதை விட தமிழ்நாட்டில் டெஸ்ட் அடிப்பது கஷ்டம் கிடையாது. ஒன்றில் இருக்கும் பிரச்னை இன்னொன்றில் இருக்காது. வேறு மாதிரியாக இருக்கும் அவ்வளவு தான் என்பதை புரிந்துகொள்ளுங்கள்.