TamilSaaga

“எப்போது சிங்கப்பூரில் கட்டுப்பாடுகளை தளர்த்தலாம்” : டெல்டாவை மிஞ்சியதா? Omicron – அமைச்சர் ஓங் விளக்கம்

சிங்கப்பூர் தற்போதைய ஓமிக்ரான் எழுச்சி உச்சத்தை அடைந்து, அதன் பிறகு குறையத் தொடங்கியவுடன், சிங்கப்பூர் அதன் COVID-19 பாதுகாப்பான மேலாண்மை நடவடிக்கைகளை எளிதாக்குவதை எதிர்நோக்க முடியும் என்று நேற்று திங்களன்று (பிப்ரவரி 14) சுகாதார அமைச்சர் ஓங் யே குங் பேசுகையில் கூறினார். ஓமிக்ரான் டிரான்ஸ்மிஷன் அலையை “எங்கள் சுகாதார அமைப்பு சமாளிக்க முடியுமா என்பதை உறுதிப்படுத்த, முக்கிய நடவடிக்கைகளை நமது நாடு தொடர்ந்து கண்காணிக்கும்” என்று திரு ஓங் மேலும் கூறினார்.

சிங்கப்பூரில் இத்தனை வருடங்களாக இருந்த விடுமுறை முறையை மாற்றும் MOM – “Sick Leave”-க்கு வரும் சிக்கல் – அமைச்சர் அறிவிப்பு

தற்போதைய கோவிட்-19 கட்டுப்பாடுகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களான லிம் பியோவ் சுவான் (PAP-மவுண்ட்பேட்டன்), ஜெரால்ட் ஜியாம் (WP-அல்ஜூனிட்) மற்றும் கிறிஸ்டோபர் டி சோசா (PAP-ஹாலண்ட்-புக்கிட் திமா) ஆகியோர் எழுப்பிய நாடாளுமன்ற கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கும்போதும் மேற்குறிப்பிட்ட தகவல்களை அவர் கூறினார். தற்போதைய கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுமா, எப்போது இந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட முடியும் என்பது தொற்றுநோய் சூழ்நிலையைப் பொறுத்தது என்று திரு ஓங் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.

“நாடு ஒரு நாளைக்கு 15,000 முதல் 20,000 COVID-19 வழக்குகள் அல்லது அதற்கும் அதிகமாக ஏற்படக்கூடும் என்று அவர் முன்னர் சுட்டிக்காட்டினார். இருப்பினும், இந்த உயர்மட்ட புள்ளிவிவரங்கள் சிங்கப்பூர் தொற்றுநோய் வளைவில் எங்குள்ளது என்பதைக் காட்டினாலும், அதைவிட முக்கியமானது நோயின் தீவிரம் மற்றும் சுகாதாரத் திறன் ஆகியவற்றின் மீதான தாக்கமாகும், என்றார் அவர். “இதுவரை, டெல்டா மாறுபாட்டுடன் ஒப்பிடும்போது Omicron மாறுபாட்டின் தாக்கம் கணிசமாக மிதமானதாக இருந்தது” என்று திரு ஓங் கூறினார்.

ஏன் டெல்ட்டாவை விட omicronன் தாக்கம் குறைவாக உள்ளது என்பதற்கு அவர் இரண்டு காரணங்களைச் முன்வைத்தார். முதலாவதாக, ஓமிக்ரான் டெல்டாவை விட குறைவான கடுமையான மாறுபாடு ஆகும், ஏனெனில் இது மேல் சுவாசக் காற்றுப்பாதைகளை பாதிக்கிறது. இரண்டாவதாக, சிங்கப்பூரின் மக்கள் தொகையில் அதிக சதவீதத்தினர் தடுப்பூசி போடப்பட்டுள்ளனர் அல்லது பூஸ்டர்களைப் பெற்றுள்ளனர் என அமைச்சர் கூறினார்.

சிங்கப்பூரில் சைக்கிளிங் போவது சுகமானது தான் : ஆனா சைக்கிளிங்கில் எதெல்லாம் பண்ணக் கூடாது? – அரசின் புது Rules இதோ

சிங்கப்பூரை பொறுத்தவரை தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் (ICU) உள்ள COVID-19 நோயாளிகளையும் திரு ஓங் சுட்டிக்காட்டினார், COVID-19 வழக்குகளில் சுமார் 0.05 சதவீதம் அல்லது 10,000ல் ஐந்து பேருக்கு தீவிர சிகிச்சை தேவைப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts