TamilSaaga

சிங்கப்பூர்.. கழிவறையில் இளம்பெண்ணை ஆபாசமாக படமெடுத்த இந்திய தொழிலாளி.. போனை சோதித்ததில் அதிர்ந்து போன போலீஸ் – சிங்கை சிறையில் பிரசாந்த்!

சிங்கப்பூரில் உள்ள Fairmont என்ற ஹோட்டலில் உள்ள அலுமினிய பேனல்களை சுத்தம் செய்து பாலிஷ் செய்ய தனது நிறுவனத்தால் நியமிக்கப்பட்ட 28 வயது இளைஞர், அங்குள்ள கழிப்பறையைப் பயன்படுத்திய 16 வயது அமெரிக்க (சர்வதேச) மாணவியை வீடியோ எடுத்துள்ளார்.

மேலும் அவரது மொபைல் போனில் கிட்டத்தட்ட 2,000 ஆபாச வீடியோக்கள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று வெள்ளியன்று (ஏப்ரல் 22), பூமாலை பிரசாநாத் என்ற அந்த இந்திய தொழிலாளிக்கு 11 வர சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்று todayonline நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்திய நாட்டவரான பிரசாந்த் குற்றச்செயல்களில் ஈடுபட்டபோது Work Permit வைத்திருந்தார், என்றும் நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றது. GAG உத்தரவு காரணமாக பாதிக்கப்பட்ட அந்த பெண்ணின் பெயரை நீதிமன்றம் வெளியிடவில்லை.

கடந்த ஆண்டு மார்ச் 11-ம் தேதி ஃபேர்மாண்ட் ஹோட்டலின் டென்னிஸ் மைதானத்தில் டென்னிஸ் விளையாடி கொண்டிருந்த 16 வயது மாணவியை பூமாலை பார்த்துள்ளார். அதன் பிறகு அந்த பெண் ஹோட்டலின் எட்டாவது மாடியில் உள்ள பல கழிவறைகளை கொண்ட அறைக்குள் செல்லும் போது, ​​பூமாலை அங்கு நிற்பதையும் கண்டுள்ளார்.

“சிங்கப்பூர் வாழ் புலம்பெயர் தொழிலாளர்கள்.. PCP மூலம் 2 வெள்ளி கட்டணத்தில் மருத்துவ ஆலோசனை – MOM வெளியிட்ட Latest Update

அந்த பெண் கழிவறைக்கு செல்லும்போது அவருக்கு அருகில் இருந்த கழிவறை திறந்தும், உள்ளே இருந்த toilet lid மூடி இருந்ததையும் கவனித்துள்ளார். இதனையடுத்து அந்த பெண் கழிவறைக்கு சென்றது வேறு ஒருவர் கழிவறைக்குள் வருவதை உணர்ந்துள்ளார்.

ஆனால் உள்ளே ஒருவர் வந்தும் Toilet Lid திறக்கும் சத்தம் கேட்காததால் பயந்த அவர் வெளியே ஓடிச்சென்று தனது ஆசிரியரிடம் நடந்ததை கூறியுள்ளார். ஆசிரியர் ஹோட்டல் நிர்வாகத்திடம் கூற அவர்கள் அடுத்த நாள் வேலைக்கு வந்த பூமாலையிடம் விசாரித்துள்ளனர்.

முன்னுக்கு பின் முரணாக பேசிய அவர், தான் அந்த கழிவறை உள்ள அறைக்கு சென்றது வெளியில் உள்ள பேசினில் தண்ணீர் குடிக்கத்தான் என்று கூறியுள்ளார். பின் விசாரித்ததில் அவர் கழிவறையில் அத்துமீறி நுழைந்து கழிவறையில் இருந்த சிறுமியின் இரண்டு ஆபாச வீடியோக்களை எடுத்ததை ஒப்புக்கொண்டார்.

2 வருடங்கள் வெளிநாடு ஊழியர்கள் பட்டபாடுக்கு கிடைத்த வெகுமதி… கண்ணீர் மல்க வரவேற்ற சாங்கி விமான நிலையம் – மார்ச் மாதம் புதிய “ரெக்கார்டு”

வீடியோவில் ஆபாசமாக எதுவும் பதிவாகாத நிலையில் அவர்கள் அந்த வீடியோவை டெலீட் செய்துள்ளனர். அதே போல அந்த ஹோட்டலில் உள்ள வேறு ஒரு கழிவறையில் இதுபோன்ற செயலில் ஈடுபடத்தையும் பிரசாந்த் ஒப்புக்கொண்டார்.

இதுமட்டுமல்லாமல், கடந்த ஆண்டு பிப்ரவரி 26ம் தேதி, பூமாலை MRT ரயிலில் இருந்தபோது, பள்ளி சீருடையில் இருந்த 2 மாணவிகளின் Skrit மற்றும் முழங்கால் வீடியோவை எடுக்க முயன்றுள்ளார். பின்னர் அவர் எடுத்த மூன்று வீடியோ கிளிப்களை Delete செய்துள்ளார்.

போலீசார் அவரது போனை சோதனையிட்டபோது அதில் 1836 ஆபாச வீடியோகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts