TamilSaaga

சிங்கப்பூரில் அக்டோபர் மாதம் அமலுக்கு வரும் சில முக்கிய நடைமுறைகள்!

சிங்கப்பூரில் வருகின்ற அக்டோபர் மாதம் சில முக்கிய விதிமுறைகள் அமலுக்கு வர உள்ளன அவற்றைப் பற்றி ஒரு சிறு பார்வையாக பார்க்கலாம்.

சிங்கப்பூரில் மின்சார கட்டணமானது அக்டோபர் மாதம் சராசரியாக 3.7 சதவீதம் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான தயாரிப்புச் செலவுகள் அதிகரித்திருப்பதால் மின்சார கட்டணமும் அதிகரிப்பதாக அரசு அறிவித்துள்ளது. இந்த மின்சார கட்டணத்தினை சமாளிக்க நடுத்தர குடும்பங்களுக்கு மாநிலம் வழங்கப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது. மேலும் தண்ணீர் கட்டணமும் கூடும் எனவும் அறிவிப்பு வெளியாகி இருந்தது.

அக்டோபர் 9ஆம் தேதி முதல் சிங்கப்பூர் போஸ்ட் உள்நாட்டு அஞ்சல் கட்டணத்தை 20 சென்ட்கள் அதிகரிப்பதாக அறிவிப்பினை முன்கூட்டியே வெளியிட்டு இருந்தது.

சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்தின் இரண்டாவது டெர்மினல் ஆனது நீண்ட நாள் சீரமைப்பு பணிகளுக்கு பின்பு தனது வடபகுதியை அண்மையில் திறந்து விமான சேவையை தொடங்கியது. இந்நிலையில் அக்டோபர் மாத இறுதிக்குள் டெர்மினல் முழுவதும் செயல்பாட்டிற்கு வரும் என தெரிவித்துள்ளது.

வேலை இடங்களில் மரணங்கள் தொடர்ந்து வருவதால் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாத நிறுவனங்களுக்கு குற்றப் புள்ளிகளை வழங்குவதாக முடிவு செய்துள்ளது. விதிமீறல்களில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு வெளிநாட்டு ஊழியர்களை பணியமர்த்துவதற்காக இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்படலாம் எனவும் தெரிவித்துள்ளது.

Related posts