TamilSaaga

“சிங்கப்பூர் வரும் பயணிகளின் கவனத்திற்கு” – சிங்கப்பூர் சுகாதார அறிவியல் ஆணையம் அளித்த Update

கடந்த ஆண்டு டிசம்பர் 23 முதல் இனி சிங்கப்பூருக்குள் நுழையும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் ஒவ்வொருவரும் தங்களுடன் அதிகபட்சமாக 20 கோவிட்-19 சுய-பரிசோதனை கருவிகளைக் கொண்டு வர அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அறிவியல் ஆணையம் (HSA) தெரிவித்துள்ளது. எல்லைகள் மீண்டும் திறக்கப்பட்ட சூழலில்,சுய-பரிசோதனை கருவிகள் தேவையான ஒன்றாக இருப்பதால் சோதனை தொடர்பான தேவையை பூர்த்தி செய்ய பயணிகள் சுய-பரிசோதனை கருவிகளை கொண்டு வர வேண்டியதின் அவசியத்தை HSA அங்கீகரிக்கிறது.

இதையும் படியுங்கள் : நான்கு ஆண்டுகள்.. 200 கிலோ to 76 கிலோ : உண்மையிலேயே Inspirationஆக மாறிய ஒரு சிங்கப்பூரர் – எப்படி எடையை குறைத்தார் தெரியுமா?

சிங்கப்பூரில் பயன்படுத்த அங்கீகரிக்கப்பட்ட சோதனைக் கருவிகள் மற்ற நாடுகளில் உடனடியாகக் கிடைக்காமல் போகலாம் என்பதால் பயணிகள் தங்களுடைய நாட்டிலிருந்து அனுமதிக்கப்பட்ட சோதனைக் கருவிகளைக் கொண்டு வரலாம் என்றும் பார்சல் போஸ்ட் மூலம் சுய பரிசோதனை கருவிகளை இறக்குமதி செய்வது இன்னும் அனுமதிக்கப்படவில்லை என்றும் HSA தெரிவித்தது.

தற்போது, தடுப்பூசி போடப்பட்ட பயணப் பாதைகள் வழியாக சிங்கப்பூருக்குள் நுழைபவர்கள், அவர்கள் வந்த பிறகு கட்டாய ஆன்-அரைவல் ஆன்டிஜென் ரேபிட் சோதனைகளை (ARTs) மேற்கொள்ள வேண்டும்.

இதையும் படியுங்கள் : “சிங்கப்பூர் Orchard சாலை சந்திப்பில் விபத்து” : சொகுசு கார் மோதியதில் மூவருக்கு காயம் – ஸ்தம்பித்த போக்குவரத்து


HSA-ன் இணையதளத்தின்படி, 11 Covid-19 சுய-பரிசோதனை கருவிகள் சிங்கப்பூரில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்த கருவிகள் மூலம் சிங்கப்பூர் வரும் பயணிகள் 14 நாட்களுக்கு தங்களை சுய-பரிசோதனை செய்து கொள்ள வேண்டுமென HSA கூறியது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”


Related posts