சிங்கப்பூரின் பிரபல Hwa Chong இன்ஸ்டிடியூஷனின் (HCI) ஆலோசகர், தனது அனைத்துப் பணிகளிலிருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அதாவது, கடந்த ஜூலை 13 அன்று HCI counsellor ஒரு Presentation ஒன்றை உருவாக்கி அதனை மாணவர்களுக்கு போட்டு காண்பித்திருக்கிறார். அதில், லெஸ்பியன், ஓரினச்சேர்க்கை, இருபாலினம், திருநங்கை (LGBTQ) நபர்களுக்கு எதிராக பாகுபாடு காட்டும் விதமாக காட்சிகளும், கருத்துக்களும் இருந்ததாக தெரிய வந்தது. இதனால், சில மாணவர்களால் மனரீதியாக வருத்தப்பட்டதாகவும் புகார் எழுந்தது.
இந்த சம்பவம் சிங்கப்பூர் நாடாளுமன்றம் வரை தற்போது எதிரொலித்துள்ளது. இதுகுறித்து நேற்று (ஆக.2) நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த கல்வித்துறை அமைச்சர் சான் சுன் சிங், “ஆசிரியர்கள் மாணவர்களின் தேவையை கண்காணிப்பதில் விழிப்புடன் உள்ளனர். சம்பந்தப்பட்ட அந்த ஆலோசகரின் கருத்துக்களால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் பள்ளித் தலைவர்கள் அல்லது பள்ளியில் நம்பகமான மூத்த ஆசிரியர்களை அணுக ஊக்குவிக்கப்படுகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்திற்குப் பிறகு பாலியல் கல்வி பாடங்களை நடத்துவதிலிருந்து ஆலோசகர் இடைநீக்கம் செய்யப்பட்டார். அந்த Presentation-ல் இடம் பெற்றிருந்த கருத்துக்கள் பள்ளியால் அங்கீகரிக்கப்படவில்லை என்று HCI கூறியுள்ளது.
அப்படி என்ன தான் அந்த Presentation-ல் இருந்தது?
அந்த Presentation ஸ்லைடுகளில் பெரும்பான்மையான ஓரினச்சேர்க்கையாளர்கள் எவ்வாறு குடல் புழுக்களால் பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள் என்றும், அந்த ஓரினச்சேர்க்கையாளர்களில் எத்தனை பேர் குழந்தைகள் மீது கவர்ச்சி கொள்பவராக இருக்கிறார்கள் என்பது போன்ற புகைப்படங்கள் இடம் பெற்றிருக்கின்றன.
மேலும், அந்த ஸ்லைடுகளில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு குடிப்பழக்கம் மற்றும் பாலியல் வன்கொடுமை போன்ற பிரச்சனைகளும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அந்த ஸ்லைடுகளை பார்த்த மாணவர்கள், மனரீதியாக பாதிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. ஆனால், கல்வி நிர்வாகமோ எங்களுக்கும் இந்த கருத்துக்களுக்கும் சம்பந்தமில்லை என்று கூறிவிட்டது.
இதனால், ஓரினச்சேர்க்கை, லெஸ்பியன் போன்றவை குறித்து மாணவர்களுக்கு புரிய வைக்க நினைத்து இப்போது தனது அனைத்து பொறுப்புகளில் இருந்து அந்த ஆலோசகர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.