The Singapore Personal Access அல்லது Sing Pass என்று அழைக்கப்படும் இது ஒரு காலத்தில் சிங்கப்பூரிலுள்ள குடிமக்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் இந்த வகை Passகள் சிங்கப்பூர் குடிமக்களுக்கு மட்டுமல்லாமல் இங்கு பணி செய்து வரும் வெளிநாட்டு ஊழியர்கள் உட்பட அனைவருக்கும் கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்த Sing Pass என்பது உங்கள் சொந்த (Personal) தகவல்களை உள்ளடக்கிய ஒரு டிஜிட்டல் தளம், அண்மையில் சிங்கப்பூர் அரசு வெளியிட்ட ஒரு செய்தி குறிப்பில் கடந்த மார்ச் 7ம் தேதி முதல் “சிங்பாஸ்” செயலியில் பயனாளரின் டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் இணைக்கப்படும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று இந்த பதிவில் சிங்பாஸ் என்பது ஒரு வெளிநாட்டு ஊழியருக்கு எந்த அளவு முக்கியம் என்பதையும் இந்த சிங்பாஸ் இன் ID மற்றும் Password மறந்து விட்டால் அதை எப்படி மீட்டெடுப்பது என்பதையும் இந்த பதிவில் காணலாம்.
வெளிநாட்டு தொழிலாளர்கள்..
இந்த பெருந்தொற்று காலத்தில் Sing Pass என்பதும் ஒவ்வொரு வெளிநாட்டு தொழிலாளருக்கு மிகவும் தேவையான ஒன்று என்று தான் கூறவேண்டும். காரணம் உங்கள் தடுப்பூசி சான்றிதழ்களும் உங்கள் Sing Passல் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் உங்கள் International Vaccination Certificate நகலெடுக்கவும் Sing Pass கட்டாயம் அவசியம்.
Sing Pass மூலம் எப்படி Vaccination சான்றிதழ் பெறுவது.
நீங்கள் பதிவிறக்கம் செய்துள்ள Sing Pass செயலியில் உங்கள் NRIC மற்றும் பிற தகவல்களை அளித்து புதிய Account ஓபன் செய்த பிறகு உங்களால் vaccination சான்றிதழை பதிவிறக்கம் செய்ய முடியும். செயலியின் உள்ளே உள்ள Medical Hub என்ற Optionஐ கொண்டு உங்கள் தடுப்பூசி சான்றிதழை PDF முறையில் பதிவிறக்கம் செய்யமுடியும்.
Sing Pass ID மற்றும் Password மறந்துபோனால் என்ன செய்வது?
உங்கள் Sing Pass ID அல்லது Passwordஐ நீங்கள் மறந்துவிட்டால் எந்த விதத்திலும் நீங்கள் கவலைக்கொள்ள தேவையில்லை. www.singpass.gov.sg/home/ui/login என்ற இந்த இணையதளம் மூலம் நீங்கள் உங்கள் Sing Pass ID மற்றும் Passwordஐ மீட்டெடுக்க முடியும்.
முதலில் மேற்குறிப்பிட்ட இந்த இணையத்தை அணுகும்போது அதில் கீழ் கண்டுள்ளவாறு பல தகவல்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.
அதில் உங்களுக்கு தேவையான சேவையை தேர்ந்தெடுக்கலாம்.. உதாரணமாக உங்களுடைய Sing Pass ID மறந்துபோயிருந்தால் Retrieve Singpass ID என்ற சேவையை கிளிக் செய்து அதில் உங்கள் NRIC மற்றும் பிற தகவல்களை கொடுத்து உங்கள் IDயை மீட்டெடுக்கலாம்.
அதே போல உங்கள் Passwordஐ நீங்கள் மறந்திருந்தால் அதே போல NRIC மற்றும் பிற தகவல்களை அளித்து Passwordஐ Reset செய்துகொள்ளலாம். மேலும் இந்த தலத்தில் புதிய Sing Pass எடுப்பது உள்ளிட்ட பல தகவல்கள் கொடுக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
சரியான தரவுகள் இருந்தால் யாருடைய உதவியும் இல்லாமல் நீங்களே வெறும் 5 நிமிடத்தில் Sing Pass ID மற்றும் Password ஆகியவற்றை மாற்றிக்கொள்ளலாம்.