தலைப்பைப் படித்த உடனேயே.. “ஏஜெண்ட்டுக்கு பணம் கொடுத்து போறதுக்கு எதுக்குப்பா Resume-ஐ நான் பெருசா ரெடி பண்ணிட்டு போகணும்? நானே பணம் கொடுத்து வேலையை வாங்குறேன்” என்று நினைப்பவர்கள் ஒரு நிமிடம் உங்களது இந்த யோசனையை தூர வைத்துவிட்டு இந்த செய்தியை படியுங்கள்.
இரண்டாவது, எப்படியாவது பணம் கொடுக்காமல் நாமே சிங்கப்பூரில் வேலையை பெற்றுவிட வேண்டும் என்பவர்களுக்கு இந்த செய்தி மிக மிக முக்கியமானது.
Resume என்றால் என்ன? என்று உங்களுக்கு வகுப்பெடுக்க தேவையில்லை. ஆனால், அதில் என்னென்ன விஷயங்கள் இருக்க வேண்டும்? என்னென்ன இருந்தால், உங்களை தேர்வு செய்பவர்கள் அல்லது Interview செய்பவர்கள் அதை விரும்புவார்கள்? அல்லது எதை எதை அவர்கள் விரும்ப மாட்டார்கள் அல்லது கண்டுகொள்ள மாட்டார்கள்? என்பதை நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.
அதுமட்டுமின்றி, நீங்கள் ஏஜென்ட் மூலம் பணம் கொடுத்து வேலையைப் பெற்றாலும், உங்களது Resume-ஐ சம்பந்தப்பட்ட கம்பெனியின் HR தரப்பில் பார்ப்பார்கள் என்பதை மறக்க வேண்டாம். ஒருவேளை உங்களது Resume அவர்களை இம்ப்ரெஸ் செய்தால், எதிர்பார்த்ததை விட அதிக சம்பளம் கிடைக்கலாம்.
முதலில், நீங்கள் செய்ய வேண்டியது, உங்களது நண்பர்களின் Resume-ஐ வாங்கி அப்படியே எடிட் செய்யும் பழக்கத்தை விடுவது தான். ‘Objective-ல் இருந்து, Hobbies’ வரை எல்லாமே காப்பி அடிப்பது என்பது டோட்டல் வேஸ்ட். நிறுவனங்கள் முதலில் உங்களிடம் எதிர்பார்ப்பது என்ன தெரியுமா? “நேர்மை”. உங்களிடம் அது இருப்பதை அவர்கள் தெரிந்து கொண்டாலே, நீங்கள் பாதி கிணறு தாண்டிவிட்டீர்கள் என்று அர்த்தம்.
உங்களது படிப்பு, திறமை, தகுதி எல்லாம் இரண்டாம் பட்சம் தான். முதலில், ‘நான் இப்படித்தான்’ என்ற நேர்மை உங்களிடம் இருக்க வேண்டும். அது உங்கள் Resume-ல் வெளிப்பட வேண்டும். அனுபவத்தை பொறுத்தவரை, உங்களுக்கு என்ன தெரியுமோ, அதை மட்டும் Resume-ல் குறிப்பிடுங்கள். எல்லா ஐட்டங்களையும் சேர்த்தால் தான் வேலை கிடைக்கும் என்று நீங்கள் நினைத்தால் அது மடத்தனத்தின் உச்சம். ஏனெனில், கேள்விகள் அதைப் பற்றித் தான் அம்பு போல வரும். பதில் தெரியவில்லை என்றால் சிக்கி சின்னாபின்னமாகி விடுவீர்கள்.
அதுபோல், நான் 2ம் வகுப்பில் சாக்கு போட்டியில், 2ம் பரிசு வாங்கினேன், தவளை ரேஸில் முதல் பரிசு வாங்கினேன் என்றெல்லாம் தயவு செய்து போடாதீர்கள். பிறகு, HR உங்களை போட்டுவிடுவார்.
ஆனால், நம்மிடம் உள்ள பிரச்சனையே, நாமாக ஒரு முழு Resume-ஐ யாருடைய சாயலும் இன்றி உருவாக்க முடியாமல் இருப்பது தான். கவலை வேண்டாம். நாங்கள் இங்கே கீழே கொடுத்துள்ள வெப்சைட்டுகள் மூலம் நீங்கள் இலவசமாக உங்களுக்கு ஏற்ற வகையில் தரமான Resume-ஐ தயார் செய்துவிடலாம். இதற்கு உங்களுக்கு யாருடைய துணையும் தேவையில்லை. பணமும் கட்ட வேண்டியதில்லை.
www.canva.com
www.novoresume.com
www.resume.com
www.visualcv.com
www.zety.com
இந்த தளங்களின் மூலம் உங்கள் Resume-ஐ தயாய செய்து நீங்களாகவே LinkedIn, JobStreet உள்ளிட்ட பல வெப்சைட்டுகளில் சிங்கப்பூரில் வேலை பெறுவதற்காக விண்ணப்பிக்கலாம்.
ஆல் தி பெஸ்ட்!