சிங்கப்பூரில் லைசன்ஸ் எடுப்பதற்கு கண்டிப்பாக exam எழுத வேண்டும். இதற்கு practice காக நீங்க நேரடியாக செல்ல தேவையே இல்லை. உங்க மொபைலில் இருந்தே தினமும் pratice செய்ய முடியும்.
தமிழ்நாட்டில் லைசன்ஸ் எடுக்க வண்டியை ஓட்டிக் காட்டினாலே போதுமானது. ஆனால் சிங்கப்பூரில் அப்படி இல்லை. வண்டி ஓட்டுவதில் மட்டுமல்லாமல் basic theory மற்றும் final theory ஆகிய தேர்வுகள் எழுத வேண்டும். இதற்கு தினமும் சிலர் பயிற்சி நிறுவனத்துக்கு சென்று பயிற்சி செய்ய வேண்டி இருக்கும்.
ஆனால், உங்கள் பணி நேரமோ மற்ற வேலைகளாலோ அதில் பிரச்னை ஏற்படலாம். உங்களால் செல்ல முடியாமல் போகலாம். சிங்கப்பூரை பொறுத்த வரை இந்த தேர்வில் பயிற்சி பெற வேண்டியதும் கட்டாயம். இதில் தோல்வி அடைந்தால் கூட உங்களுக்கு லைசன்ஸ் கிடைக்காது.
இந்த பயிற்சியை வீட்டில் இருந்தே செய்யலாம் என்றால் நம்ப முடியுமா? அதற்கும் ஒரு வழி இருக்கு. TP Test என கூகுள் ப்ளேஸ்டோரில் ஒரு ஆப் இருக்கும். அதை டவுன்லோட் செய்து அதில் பயிற்சி எடுத்தாலே போதுமானது. சரி அதில் முழுதும் ஆங்கிலத்தில் வருகிறது. எனக்கு தமிழில் தான் தெரியும் என்பவர்களுக்கு ஒரு வழி சொல்றோம்.
TP test ஆப்பிற்கு என இருக்கும் இணையத்தளத்தில் சென்று நீங்கள் எழுத வேண்டிய டெஸ்ட்க்கான பிராக்டீஸ் பக்கத்தினை ஓகே செய்யுங்கள். உங்களுக்கு கேள்விகள் வர துவங்கும். அதில் கேள்வி மற்றும் பதில்களை select செய்தால் translate என்ற ஆப்ஷன் காட்டப்படும்.
அதை கிளிக் செய்யும் போது, நீங்க தேர்வு செய்த கேள்வி தமிழில் காட்டப்படும். அதை வைத்து நீங்கள் கேள்விக்கான பதிலை தேர்வு செய்யலாம். இப்படி தொடர்ந்து பிராக்டீஸ் செய்தால் உங்களால் கண்டிப்பாக இந்த எக்ஸாமை பாஸ் செய்ய முடியும். இந்த தேர்வினை தமிழிலும் எழுதலாம்.