TamilSaaga

சிங்கப்பூருக்கு கூப்பிட்டு வந்த வேலை இல்லாமல் வேறு வேலையை செய்ய சொல்கிறார்களா? என்ன செய்யலாம்? மறைக்கப்பட்ட மறு பக்கம் தெரிந்து கொண்டு விமானம் ஏறுங்கள்

சிங்கப்பூரில் டிரைவர் வேலைக்கோ வேறு சில வேலைக்களுக்கோ அழைத்து வரப்படுவார்கள். இதில் பலருக்கு மாற்றம் நடக்காது. ஆனால் ஒரு சிலருக்கோ வந்த வேலைக்கு பதில் வேறு வேலையை கொடுப்பார்கள். அப்போது என்ன செய்யலாம் எனத் தெரிந்து கொண்டு சிங்கப்பூர் வாங்க.

முதலில் ஏஜெண்ட்டின் வேலைக்காக செல்லும் போது எவ்வளவு கட்ட வேண்டும். என்ன சம்பளம் எனக் கேட்பவர்களே அதிகம். ஆனால் முதல் உங்க வேலை என்ன, எப்படி இருக்கும். எத்தனை மணி நேர வேலை என்பதை விசாரியுங்கள். சில கம்பெனிகள் 8 முதல் 5 மணி வரை ஒருநாள் வேலை கொடுக்கும். சில கம்பெனியோ 8 முதல் 7 வரை ஒரு நாள் வேலை என நிர்ணியித்து இருப்பார்கள். இதனையெல்லாம் தெரிந்து கொண்டு பணம் கட்டுங்கள்.

அனுபவம் வாய்ந்த துறையை விட்டு வேறு துறைக்கு வேலைக்கு செல்வதும் அதிகரித்துள்ளது. மாற இருக்கும் துறை குறித்து அதில் அனுபவம் உள்ளவர்களிடம் பேசி நன்றாக தெரிந்து கொள்ளுங்கள். உங்களால் முடியும் என்ற நம்பிக்கை இருந்தால் மட்டுமே சிங்கப்பூர் கிளம்ப ஆயத்தமாகுங்கள்.

சிங்கப்பூரும் வந்தாச்சு, ஆனா சொன்ன வேலைக்கு பதில் வேறு வேலை கொடுத்து செய்ய சொல்கிறார்களா? உங்களின் சூப்பர்வைசர் மற்றும் ஹெச்.ஆரை தொடர்பு கொண்டு வேலையை மாற்றி தரும்படி கேளுங்கள். அப்போதும் மாற்றிக்கொடுக்காத பட்சத்தில் நீங்கள் MOMம் தொடர்பு கொண்டு உங்க புகாரை கொடுக்கலாம்.

சிலருக்கு வேலை கூட செட்டாகி விடும். தங்கும் இடம் வித்தியாசமாக இருக்கும். ஊரில் தனி ரூமில் இருந்தவர்களுக்கு சிங்கப்பூரில் ஊழியர்களுக்கு இடையே இருக்கும் dormitory கஷ்டமாக தான் இருக்கும். ஆனால் நாட்கள் செல்ல செல்ல இதிலும் உங்களுக்கு பிடித்து போகும். வந்த சில நாட்கள் பொறுத்து கொள்வது உங்க எதிர்காலத்தில் பிரச்னையை குறைக்கும்.

ஏனெனில், லட்சங்களை கட்டி தான் பலரும் சிங்கப்பூருக்கு வருகிறார்கள். மூன்று மாதத்தில் பிடிக்கவில்லை எனக் கிளம்பினால் அது உங்களுக்கு தானே நஷ்டம் என்பதை மறக்காதீர்கள். சிங்கப்பூர் பார்ப்பதற்கு அழகாக இருக்கும் என்ற எண்ணம் சுற்றுலா பயணிக்கு தான். வேலைக்கு வரும் போது எந்த நாட்டிலும் பல மணி நேர வேலை, உழைப்பு, கஷ்டம் என்பதே நிறைந்து இருக்கும் என்பதை மறக்க வேண்டாம்.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts