TamilSaaga

Johor Bahru-க்கு பஸ்ல போகணுமா? குழம்ப வேண்டாம்! இந்த தகவலை யூஸ் பண்ணி ஈஸியா போகலாம்!

Johor Bahru மலேசியாவில் உள்ள ஒரு அழகிய நகரம். சிங்கப்பூரிலிருந்து மலேசியா செல்லும்பொழுது Johor மாநிலத்தைக் கடந்து தான் செல்ல வேண்டும். Johor Bahru என்பது இந்த மாநிலத்தின் தலைநகரம் ஆகும். மலேசியாவின்தென் பகுதியில் இது அமைந்துள்ளது. குடும்பத்துடன் நண்பர்களுடன் சுற்றுலா செல்ல மிகவும் ஏற்ற இடம். ஏராளமான கடைகள், கலாசார வீதிகள், பார்க் மற்றும் கொண்டாட்டம் என களைகட்டும் இந்த நகரத்திற்கு சிங்கப்பூரில் இருந்து எளிதாக செல்ல முடியும். 

சிங்கப்பூர் மக்கள் தங்கள் வீக்கென்ட்- ஐ கழிக்க இது ஒரு பர்பெஃக்டான ஸ்பாட். 

சரி எப்படி எளிதாக சிங்கப்பூரில் இருந்து Johor Bahru செல்வது? 

Johor Bahruசெல்ல சிறந்த மற்றும் மலிவான முறை பேருந்து தான். வெறும் 40 நிமிடங்களில் நீங்கள் சிங்கப்பூரில் இருந்து Johor Bahru செல்ல முடியும். ஒருவேளை போக்குவரத்து நெரிசல் இருப்பின் அதிகபட்சம் 2 மணி நேரங்கள் வரை ஆகலாம். ஆனால் சாதாரண நேரங்களில் 40 முதல் 50 நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் நீங்கள் Johor Bahru செல்ல முடியும் அதுவும் சில டாலர்கள் செலவில். 

பேருந்தில் செல்வத்திலும் சில நிறை குறைகள் உண்டு. 40 நிமிடத்தில் செல்வது, மலிவான செலவு, தொடர்ச்சியான பேருந்து சேவை, ஏராளமான பேருந்துகள், சிங்கப்பூர் முழுவதிலும் போர்டிங் செய்வதற்கான வசதிகள் என பல நிறைகள் உள்ளன. குறைகள் என்று பார்த்தால், போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்கும் பட்சத்தில்  ஏறத்தாழ 2 மணி நேரங்கள் வரை தாமதம் ஆகலாம். மேலும் பேருந்து பொது போக்குவரத்து என்பதால் உட்கார இடம் இல்லாமல் போகலாம் மற்றும் Immigration செய்யும்பொழுது கூட்டம் அதிகமாக இருந்தால் அங்கும் சில காலம் காத்திருக்க வேண்டி இருக்கும். 

Johor Bahru செல்ல எந்தெந்த பேருந்து சேவைகள் உள்ளன? 

  1. SMRT Buses

பேருந்து எண்: 950 

வழித்தடம்: Woodlands Temporary Bus Interchange அல்லது Marsiling MRT station-க்கு எதிர்புறம் (Bus Stop 46529) – JB Sentral Terminal. 

மேற்கண்ட இந்த பேருந்து தினமும் 9 முதல் 13 நிமிட இடைவெளிக்கு ஒருமுறை கிடைக்கும். 

  1. SBS Transport 

எண் – 160 , வழித்தடம் – Jurong Town Hall Interchange – JB Sentral Terminal

மேற்கண்ட இந்த பேருந்து வார நாட்களில் அதிகபட்சம் 15 நிமிட இடைவெளிக்கு ஒருமுறையும், வார இறுதி நாட்களில் 6 முதல் 15 நிமிடத்திற்கு ஒரு முறையும் கிடைக்கும். 

எண் – 170 , வழித்தடம் – Queen Street Terminal முதல் Larkin Terminal

மேற்கண்ட இந்த பேருந்து வார நாட்களில் அதிகபட்சம் 15 நிமிட இடைவெளிக்கு ஒருமுறையும், வார இறுதி நாட்களில் 11 முதல் 15 நிமிடத்திற்கு ஒரு முறையும் கிடைக்கும். 

எண் – 170X , வழித்தடம் – Queen Street Terminal முதல் Larkin Terminal

மேற்கண்ட இந்த பேருந்து வார நாட்களில் 1 முதல் 15 நிமிட இடைவெளிக்கு ஒருமுறையும், வார இறுதி நாட்களில் 1 முதல் 5 நிமிடத்திற்கு ஒரு முறையும் கிடைக்கும். 

இது தவிர பல தனியார் பேருந்து சேவைகளும் உள்ளன. அதன் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 

Causeway Link 

Transtar Travelwww.transtar.travel/ 

WTS Travelcoach.wtstravel.com.sg/default.aspx 

Superior Coachwww.busonlineticket.com/bus/superior-coach-tour-pte-ltd-singapore/ 

மேற்கண்ட தனியார் பேருந்து சேவைகளுக்கு ஆன்லைனில் புக் செய்து தான் பயணம் செய்ய வேண்டும். இதற்கான பயணச் செலவு 15 டாலர்கள் வரை ஆகும்.  

Causeway Link, SMRT Bus மற்றும் SBS Transport போன்ற பேருந்துகளுக்கு நேரடியாகவோ அல்லது EZ link கார்டு மூலமாகவோ பணம் செலுத்தலாம். இதற்கான பயணச் செலவு 1.40 டாலர்கள் முதல் 4.60 டாலர்கள் வரை ஆகும். 

நாடு விட்டு நாடு செல்வதால் வழக்கம் போல Immigration இருக்கும். 

இங்கு மொத்தம் இரண்டு இடங்களில் சோதனைச் சாவடிகளைக் கடந்து செல்ல வேண்டும். 

  1. சிங்கப்பூர் சோதனைச் சாவடி 
  2. மலேசிய சோதனைச் சாவடி1

    .சிங்கப்பூர் சோதனைச் சாவடி 

சிங்கப்பூரிலிருந்து மலேசியா செல்ல உங்கள் பேருந்து Woodland பகுதிக்கு வந்ததும் அனைவரும் இறங்கி சோதனைச் சாவடிகளை செல்ல வேண்டும் அங்கு E-gate மற்றும் Manual Gate என இரண்டு முறைகளில் சோதனைகள் நடைபெறும். E-Gate மூலம் செல்ல சிங்கப்பூர் குடிமக்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு. இதன் மூலம் கடந்து செல்பவர்கள் விரைவாக கடந்து சென்று விடலாம்.E-Gate மூலம் நுழைய முடியாத வெளிநாட்டினர் Manual Gate மூலம் Passport ஆவணங்களை காட்டி சோதனைகளை நிறைவு செய்து நுழையலாம். 

சோதனைகளை முடித்த பின்னர் வெளியே சென்று நீங்கள் சிங்கப்பூரிலிருந்து வந்த அதே பேருந்து சேவை மூலம் தான் செல்ல வேண்டும். உதாரணத்திற்கு SBS Transit மூலம் வந்திருந்தால் அதே நிறுவன பேருந்தில் தான் ஏற வேண்டும். மாற்றி ஏறினால் அதறகான கட்டணத்தை செலுத்த வேண்டும். 

இந்த பயணம் causeway முதல் malaysia வரை செல்லும். 

  1. மலேசிய சோதனைச் சாவடி

மலேசியா வந்த பின்னர் சிங்கப்பூரில் நடந்த அதே சோதனை முறைகள் தான் நடைபெறும். இங்கும் உங்கள் ஆவணங்களை சரிபார்த்த பின்னர் தான் உள்ளே அனுமதிக்கப்படுவீர்கள். 

இங்கு மிக முக்கிய ஆவணம் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும். Malaysia Digital Arrival Card (MDAC) – மலேசியாவினுள் நுழைய விரும்பும் அனைத்து வெளிநாட்டினரும் இந்த படிவத்தை பூர்த்தி செய்து கட்டாயம் சமர்ப்பித்திருக்க வேண்டும். 

 Johor Bahru செல்ல நீங்கள் விரும்பினால் 3 நாட்களுக்கு முன்னரே இந்த ஆன்லைன் படிவத்தைப் பூர்த்தி செய்திடுங்கள். அதற்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

https://imigresen-online.imi.gov.my/mdac/main இந்த பக்கத்தில் உள்ள Register என்ற தேர்வை கிளிக் செய்து நீங்கள் விண்ணப்பிக்கலாம்.

ஒருவேளை நீங்கள் சிங்கப்பூர் குடியுரிமை கொண்டவராக இருந்தால் மேற்கண்ட படிவம் அவசியமில்லை.

இவையெல்லாம் முடித்து நீங்கள் JB சென்று உங்கள் சுற்றுலா நேரத்தைக் கழிக்கலாம்.

திரும்ப வரும்போதும் இதே சோதனைகள் மீண்டும் நடைபெறும். அப்பொழுது நீங்கள் ஏதேனும் ஷாப்பிங் செய்திருந்தால் அந்த பொருட்கள் சோதிக்கப்படும். மேலும் ICA சட்டப்படி அதற்கான GST வசூலிக்கப்படும்.

சிங்கப்பூரில் JB செல்வது குறைந்த செலவில் ஒரு சிறந்த சுற்றுலாவாக இருக்கும். அங்கு செல்ல சரியான அச்சமயம் இது தான் என்ற எந்த வரையறையுமில்லை. மேலும் தொடர்ந்து பேருந்து சேவைகள் இயங்கி வருவதால் நீங்கள் சென்று வர மிகவும் வசதியாக இருக்கும்.

இன்னும் என்ன ஜாலியா JB போக ரெடி ஆகுங்க!

 

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

சிங்கப்பூரில் அன்றாடம் நிகழும் புதுப்புது செய்திகளுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து தமிழ் சாகா சிங்கப்பூர் பக்கத்தில் இணைந்திடுங்கள்!

 

Related posts