TamilSaaga

டிப்ளமோ படித்துவிட்டு சிங்கப்பூர் வரப்போறீங்களா? உங்களுக்கு கண்டிப்பா தங்க கம்பளம் தான்… சம்பளம் கூட $3000 சிங்கப்பூர் டாலர் வரை இருக்குமா?

சிங்கப்பூரில் டிப்ளமோ படித்து விட்டு சென்றால் எப்படி வேலை கிடைக்கும். உங்கள் சம்பளம் என்னவாக இருக்கும் என சந்தேகத்தில் இருக்கும் உங்களுக்கு இந்த பதிவினை தொடர்ந்து படித்தால் நிறைய சந்தேகங்களுக்கு தீர்வு கிடைக்கும்.

முதலில் சிங்கப்பூருக்கு செல்லும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு அவர்களின் கல்வி தகுதியின் அடிப்படையில் வெவ்வேறு விதமான பாஸ்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இருந்தும் சிலர் குடும்ப பொருளாதாரம் மற்றும் ஏமாறும் அபாயத்தினை கணக்கில் கொண்டு skilled அடித்தோ அல்லது pcm பெர்மிட்டிலோ சிங்கை சென்று கொண்டு தான் இருக்கிறார்கள்.

சிலர் படித்திருப்பார்கள் சிலர் படிக்காமல் கூட செல்லலாம். இதில் டிப்ளமோ மட்டும் படித்திருக்கும் உங்களுக்கு சிங்கையில் வேலைவாய்ப்பு நன்றாக தான் இருக்கும். முதலில் நீங்கள் ஒரு குறிப்பிட்ட துறையில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும். அதை வைத்து சிங்கப்பூரில் S-Passல் வேலை தேட முடியும்.

முதலில் jobstreet, jobsDB போன்ற இணையத்தளங்களில் தனிப்பட்ட தகவல்களை கொண்டு பதிவு செய்யுங்கள். தொடர்ச்சியாக ஒரு நாளைக்கு 30 கம்பெனிக்கு விண்ணப்பித்து பாருங்கள். இருந்தும் இதில் வேலை கிடைப்பது வெளிநாட்டவர்களுக்கு அரிதாகவே நடந்து வருகிறது. சிங்கப்பூரில் இருக்கும் பிரபல கம்பெனிகளின் இணையதளங்களைத் தேடுங்கள்.

இதில் பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் சொந்த இணையதளத்தில் career பக்கத்தில் வேலை வாய்ப்பு குறித்து பதிவிட்டு இருப்பார்கள். உங்கள் டிப்ளமோ படிப்புக்கு ஏற்ற வேலையை கண்டறிந்தால், நீங்கள் நேரடியாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இமெயில் அனுப்பும் வசதியும் இருக்கும்.

நன்கு தெரிந்த ஏஜென்சி நிறுவனத்தினை தொடர்பு கொண்டு உங்களுக்கு சிங்கப்பூரில் படித்த துறையில் வேலைக்கு கேளுங்கள். அவர்கள் அந்த படிப்புக்கேற்ற வேலையை தேடுவார்கள். இது கிடைக்கும் பட்சத்தில் அவர்களுக்கு கட்டணமாக 3 முதல் 4 லட்ச ரூபாய் வரை கேட்கப்படும்.

இதில் உங்களுக்கு தெரிந்த நண்பர் அல்லது உறவினர் சிங்கப்பூரில் வேலையில் இருந்தால் அவர்கள் மூலமும் வேலை தேடலாம். இவர்கள் மூலம் நேரடியாக உங்கள் CV தேர்ந்தெடுக்கப்பட்டு நேர்காணலுக்கு அழைக்கும் வாய்ப்பு அதிகரிக்கும்.

இப்படி நீங்கள் படித்த டிப்ளமோ படிப்பில் சிங்கப்பூரில் வேலைக்கு சேரும் போது உங்களுக்கு மினிமம் சம்பளமாக மாதம் $3000 சிங்கப்பூர் டாலரை வரை கொடுக்கப்படும் என்பது MOM குறிப்பிட்டு இருக்கும் சமீபத்திய விதி. சில நிறுவனங்கள் இதை சரியாக கடைப்பிடித்து ot வரை கொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts