சிங்கப்பூரில் தமிழ்நாடு, ஆந்திரா, மேற்கு வங்காளம் போன்ற பல இந்திய மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் Work Permit கட்டுமானம், தொழிற்சாலை, ஹோட்டல் பணிகளுக்கு என வந்து வேலை செய்து கொண்டுள்ளனர். இந்த ஒர்க் பெர்மிட் Renewal அல்லது கேன்சல் ஆவதற்கு முன்பு அதை இன்னும் சில நாட்களுக்கு எப்படி நீட்டிப்பது என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.
சிங்கப்பூர் அரசு, ஒர்க் பெர்மிட்-ஐ 1 மாசம் வரை நீட்டிக்க ஒரு எளிய வழியை கொண்டு வந்திருக்கு. இதுக்கு அந்த குறிப்பிட்ட ஊழியர் வேலை பார்க்கும் நிறுவனம் ஆன்லைன்ல விண்ணப்பிக்கலாம். இந்த நீட்டிப்பு எப்போ தேவைப்படும்?
புதுப்பிக்க நேரம் ஆகும்போது: ஒர்க் பெர்மிட் புதுப்பிக்க சில சமயம் பேப்பர் வேலைகள் தாமதமாகும். இந்த நேரத்துல தொழிலாளி தொடர்ந்து வேலை செய்ய இந்த நீட்டிப்பு உதவும்.
வேற வேலைக்கு மாறும்போது: ஒரு நிறுவனம் விட்டு வேற நிறுவனத்துக்கு மாறணும்னா, இந்த நீட்டிப்பு அவசியமாகிறது.
குறுகிய திட்டங்களுக்கு: ஒரு குறிப்பிட்ட வேலைய முடிக்க நிறுவனத்துக்கு இன்னும் கொஞ்ச நாள் தேவைப்படும்போது, அந்த குறிப்பிட்ட ஊழியரை மேலும் சில நாட்களுக்கு சிங்கப்பூரில் தங்க வைக்க இந்த நீட்டிப்பு உதவுகிறது.
எப்படி விண்ணப்பிக்கணும்?
குறிப்பிட்ட நிறுவனம், https://login.id.singpass.gov.sg/main இந்த லிங்கில் விண்ணப்பத்தை நிரப்ப வேண்டும்.
ஊழியரோட பாஸ்போர்ட், தற்போதைய ஒர்க் பெர்மிட், எதுக்கு நீட்டிப்பு வேணும்னு காரணம் சொல்லணும்.
ஊழியருக்கு மருத்துவ காப்பீடு (Medical Insurance) இருக்கணும், முதலாளி செக்யூரிட்டி பாண்ட் (பாதுகாப்பு உத்தரவாதம்) செலுத்தியிருக்கணும்.
ஊழியரோட Work Permit காலாவதியாக 2 வாரங்களுக்கு முன்பே இதற்கு விண்ணப்பித்திருக்க வேண்டும். இந்த விதி மிக மிக கட்டாயம்.
கட்டணம் எவ்வளவு ஆகும்?
நீட்டிப்பு விண்ணப்பத்துக்கு என்று தனியாக பணம் செலுத்த தேவையில்லை ஆனால், நிறுவனம் ஒவ்வொரு மாசமும் லெவி (வேலை அனுமதி கட்டணம்) கட்டணும். மருத்துவ காப்பீடு, செக்யூரிட்டி பாண்ட் செலவுகளும் இருக்கும்.
சிங்கப்பூரின் புதிய ஒர்க் பெர்மிட் நீட்டிப்பு விதி, இந்திய தொழிலாளர்களுக்கு ஒரு சூப்பர் வாய்ப்பு. இது, வேலை தொடர்ந்து செய்யவும், பணத்தை மிச்சப்படுத்தவும், சட்டப்படி பாதுகாப்பா இருக்கவும் உதவுது. ஆனா, இதற்கு நிறுவனங்கள் முழுமையான ஒத்துழைப்பு கொடுக்கணும்.