தினமும் சிங்கப்பூர் குறித்து பல பயனுள்ள தகவல்களை நமது தமிழ் சாகா சிங்கப்பூர் குழு உங்களுக்கு வழங்கி வருகின்றது. அந்த வகையில் இன்று சிங்கப்பூர் லைசென்ஸ் எப்படி பெறுவது, அல்லது உங்களுது இந்திய ஓட்டுநர் உரிமத்தை இங்கு ஏற்பாடு கன்வெர்ட் செய்வது என்பது குறித்து விரிவாக இந்த பதிவில் காணலாம்.
12 மாதங்கள் வரை வெளிநாட்டினருக்கு ட்ரிவிங் லைசென்ஸ் தேவையில்லை!
சிங்கப்பூர் அரசின் விதிகளின்படி சிங்கப்பூர் வரும் 18 வயதுக்கு மேற்பட்ட வெளிநாட்டவர் (பணி அனுமதிச் சீட்டு / Dependent Pass / Student Pass வைத்திருப்பவர்கள், சிங்கப்பூரில் செல்லுபடியாகும் வகையில் (வகுப்பு 3, 3A அல்லது 2B) வெளிநாட்டு ஓட்டுநர் உரிமத்துடன், 12 மாதங்களுக்கு மிகாமல் சிங்கப்பூரில் வாகனம் ஓட்டலாம். ஆனால் அதுவே 12 மாதங்களுக்குப் பிறகு அவர்கள் நிச்சயம் சிங்கப்பூர் ஓட்டுநர் உரிமம் பெறவேண்டும்.
உங்கள் இந்திய லைசென்ஸை, சிங்கப்பூர் ஓட்டுநர் உரிமமாக கன்வெர்ட் செய்வது எப்படி?
BTT – சிங்கப்பூர் BTT என்று அழைக்கப்படும் சிங்கப்பூர் Basic Theory Test, இதை முதலில் நீங்கள் பாஸ் செய்தால் மட்டுமே அடுத்த கட்டத்திற்கு உங்களால் செல்ல முடியும். இதில் இந்தியா உள்பட எந்த நாட்டினருக்கு விலக்கு எல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு கீழ்காணும் மூன்று மையங்களில் ஏதேனும் ஒன்றில் நீங்கள் BTTஐ முன்பதிவு செய்யவேண்டும். இதை நேரில் சென்றோ அல்லது Online மூலமாகவோ நீங்க செய்யலாம்.
Bukit Batok Driving Centre
815 Bukit Batok West Ave 5, Singapore 659085
T – 1800 666 8888
ComfortDelGro Driving Centre
205 Ubi Ave 4, Singapore 408805
T – 6841 8900, 6848 0617
Singapore Safety Driving Centre
2 Woodlands Industrial Park E4, Singapore 757387
T – 6482 6060
BTTயில் Pass பெற்ற பிறகு அதிகாரிகள் தரும் ஆவணத்தை நீங்கள் சிங்கப்பூரில் உள்ள இந்திய உயர் கமிஷனில் ஒப்படைக்க வேண்டும். அவர்கள் உங்கள் விண்ணப்பத்தை இந்திய அதிகாரிகளுடன் ஒப்பிட்டுப்பார்த்து அனுமதி அளித்த பிறகு மீண்டும் நீங்கள் மேற்கண்ட மூன்று ட்ரிவிங் லைசென்ஸ் நிலையத்தில் ஏதேனும் ஒன்றை அணுக வேண்டும்.
அங்கு நீங்கள் இறுதியாக Traffic Police Testக்கு விண்ணப்பிக்க வேண்டும், BTT Pass பெற்ற சான்றிதழ் மற்றும் உயர் கமிஷன் அளிக்கும் சான்றிதழ் ஆகிவற்றோடு பின்வரும் ஆவணங்களை நீங்கள் அங்கு சமர்ப்பிக்க வேண்டும்.
உங்கள் பாஸ்போர்ட் மற்றும் NRIC அல்லது என்ட்ரி பெர்மிட் / Employment Pass / ஒர்க் பெர்மிட் / Dependent Pass ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின் நகல் மற்றும் அசல் ஆகியவற்றை ஒப்படைக்க வேண்டும்,
உங்கள் அசல் இந்திய ஓட்டுநர் உரிமம், அண்மையில் எடுக்கப்பட்ட வெள்ளை நிற பின்னணி உள்ள பாஸ்போர்ட் அளவு புகைப்படம்.
சேவை கட்டணமாக 50 வெள்ளி (ஆன்லைன் மூலமும் செலுத்தலாம்) ஆகியவை கட்டாயம் கொண்டுவர வேண்டும்.
நீங்கள் சிங்கப்பூரராக அல்லது சிங்கப்பூரில் நிரந்தர குடியுரிமை பெறாதவராக இருந்தால் நிச்சயம் 5 வருடத்திற்கு ஒருமுறை உங்கள் பாஸ்ப்போர்ட்டை புதுப்பிக்க வேண்டும்.