சிங்கப்பூரில் வேலை செய்யும் விரும்புவர்களுக்கு பல பாஸ்கள் இருந்தாலும், ரொம்பவே பாதுகாப்பாக கருதப்படுவது skilled test தான். இதில் வந்தவர்களுக்கு சம்பளம் ரொம்பவே குறைவு தான்.
இப்படி ரொம்பவே சொற்ப சம்பளத்தில் சிங்கப்பூர் வரும் இளைஞர்கள் தங்கள் குடும்பத்திற்கு 30 ஆயிரத்துக்குள் தான் சம்பளத்தினை அனுப்ப முடிகிறது. அப்படி இருக்கும் போது டிப்ளமோ மற்றும் டிகிரி வைத்திருப்பவர்கள் s-passக்கு மாற ஆசைப்படுவார்கள். அதில் சம்பளம் நல்ல அளவிலேயே கிடைக்கும். ஆனால் இதற்கு எப்படி மாறலாம் என்ற யோசனை பலருக்கும் இருக்கும். அதற்கான வழியினை தெரிஞ்சுக்கொள்ள தொடர்ந்து படிங்க.
உங்க கம்பெனியில் வேலை செய்து கொண்டிருக்கும் போது s-passக்கு மாறு வேலைகளை தொடருங்கள். jobstreet மற்றும் jobsDB ஆகிய இணையத்தளங்களில் உங்களது வேலைக்கான தகவல்களை பதிவிட்டு தேடுவதை வாடிக்கையாக்கி கொள்ளுங்கள்.எதேனும் கம்பெனிக்கு உங்கள் ரெஸ்யூம் பிடிக்கும் பட்சத்தில் நேர்காணல் நடக்கும். அதில் தேர்வாகும் பட்சத்தில் கம்பெனி உங்களுக்கு s-pass அப்ளே செய்வார்கள். இதற்கு ஏஜென்ட் கமிஷன் எதுவும் கிடையாது. அப்ளே செய்ய மட்டும் $200 சிங்கப்பூர் டாலர் கேட்கப்படும்.
ஆனால் சிலருக்கு உடனே s-pass கிடைக்காது. MOM ரிஜெக்ட் செய்து விடும். அதற்கு உங்களது பழைய சம்பளம் காரணமாக கூறப்படும். ஏனெனில் work permitல் வந்தவர்களுக்கு $450 டாலருக்குள் தான் சம்பளம் இருக்கும். ஆனால் s-pass என்றால் குறைந்ததே $2000 சிங்கப்பூர் டாலர் கொடுக்க வேண்டும். ஏறத்தாழ உங்களால் வீட்டுக்கு 45 ஆயிரத்தில் துவங்கி 50 ஆயிரம் வரை அனுப்ப முடியும். ஆனால் அதுவும் எளிதில் நடந்து விடாது. முதல் பிரச்னையே s-pass முதல் தடவை ரிஜெக்ட் தான் பெரும்பாலானவர்களுக்கு ஆகும்.
இரண்டு அல்லது மூன்று முறை கூட ரிஜெக்ட் செய்யப்பட்டாலும் நான்காவது முறைக்கு மேல் ஓகே ஆகிவிடும் எனக் கூறப்படுகிறது. அடுத்த பிரச்னை உங்க பழைய கம்பெனியில் இருந்து வரும். S-pass கிடைத்து இதை தொடர்ந்து உங்க பழைய கம்பெனியில் புது வேலைக்கு மாற வேண்டும் அவர்களிடம் கூறுங்கள். ஆனால் எளிதில் அவர்கள் தரப்பு அதற்கு சம்மதம் தெரிவிக்காது. பிரச்னை செய்ய கூட வாய்ப்பு உண்டு. எதுவும் பிரச்னை ஏற்பட்டால் MOMக்கு செல்லுங்கள். அவர்கள் உங்களுக்கு ஒரு படிவத்தினை கொடுத்து அதை பழைய கம்பெனியில் பூர்த்தி செய்து கொடுக்க கூறுவார்கள். புதிய கம்பெனிக்கு உடனே மாற முடியாது. 15 நாட்கள் அந்த கம்பெனியிலேயே வேலை செய்யுங்கள். அதை தொடர்ந்து தான் இங்கிருந்து வெளியேற வேண்டும் என்கிறது MOM.
இந்த MOM பார்மினை உங்கள் பழைய கம்பெனி கண்டிப்பாக ஓகே செய்து விடும். ஆனால் பழைய கம்பெனி உங்களுக்கு கொடுக்கும் மேலும் ஒரு சிக்கல். பழைய பெர்மிட்டை கேன்சல் செய்யாமல் வைத்திருப்பார்கள். இந்த கம்பெனியின் வொர்க் பெர்மிட்டை கேன்சல் செய்யாத பட்சத்தில் புதிய கம்பெனியில் வேலை செய்வது சட்டப்படி குற்றமாகும். பழைய பெர்மிட் கேன்சல் செய்தாகி விட்டது என்பதை உறுதி செய்த பின்னர் பழைய கம்பெனியில் இருந்து மொத்தமாக வெளியேறி புதிய கம்பெனிக்கு செல்லலாம்.