சிங்கப்பூர் வரும் இந்திய இளைஞர்கள் செலவு குறையும் என்பதற்காக PCM permitல் வந்துவிடுவார்கள். ஆனால் பின்னர் தொகையை சேமித்து கொண்டு டெஸ்ட் அடிக்கலாம் என நினைப்பவரா நீங்க. இதை தொடர்ந்து படிச்சு முழுசா தெரிஞ்சிக்கோங்க.
சிங்கப்பூர் வர நேரடியாக ஏஜென்ட்டை தொடர்பு கொண்டு டிக்கெட் காசில்லாமல் 2 முதல் 2.5 லட்ச ரூபாய் கட்டி PCM permitல் தான் வர முடியும். முதல் 6 மாதங்கள் நீங்கள் வந்த கம்பெனியில் தொடர்ந்து வேலை செய்யுங்கள். அவர்களிடம் skilled test அடிக்க தயாராக இருப்பதை தெரிவித்து விடுங்கள். அவர்களே ஒரு குறிப்பிட்ட மாத காலம் ஆனதும் உங்களை டெஸ்ட் அடிக்க அனுப்புவார்கள். சிங்கப்பூரில் அந்த டெஸ்ட் முடிக்க $1200க்குள் கேட்கப்படும். அந்த தொகையை கட்டி தேர்வில் பாஸ் செய்ய வேண்டும். இது தமிழ்நாட்டில் நடக்கும் டெஸ்ட் தேர்வு போலவே தான் இருக்கும்.
ஆனால் தமிழ்நாட்டில் 2 லட்சத்தில் அடிக்கும் டெஸ்ட்டினை சிங்கப்பூரில் அடித்தால் 20000க்குள் முடித்து விடலாம். அதைப் போல அரைநாள் theory வகுப்பு நடக்கும். 1.5 நாள் practical வகுப்பு நடக்கும். 3வது நாள் தேர்வையே முடித்து விடலாம். ஆனால் கண்டிப்பாக கம்பெனியின் முன் அனுமதி பெற்றே டெஸ்ட் அடிக்க வருவது முக்கியம். அவர்களுக்கு தெரியாமல் நீங்கள் டெஸ்ட் அடிக்க வந்தால் கண்டிப்பாக உங்க விசா கேன்சல் செய்யப்பட்டு சிங்கப்பூரை விட்டு வெளியேற்றி விடுவார்கள்.
ஆனால் சொந்த நிறுவனத்தில் இருந்து டெஸ்ட் அடித்து பாஸ் ஆனாலும் பெரிய அளவில் சம்பள உயர்வு இருக்காது. இதற்கு பெரிய அளவில் டாக்குமெண்ட் கேட்க மாட்டார்கள். பாஸ்போர்ட்டின் காப்பி மட்டுமே போதுமானது. சம்பளமும் அதிகபட்சமாக மாதத்திற்கு $600 சிங்கப்பூர் டாலர் மட்டுமே இருக்கும். நீங்கள் தங்கும் இடத்திற்கும் பிடித்தம் இருக்கும் என்பதால் pcm permitல் வருபவர்கள் 1.5 முதல் 2 லட்சம் மட்டுமே ஏஜென்ட்டிடம் கொடுத்து வருவது நல்லது.