TamilSaaga

சிங்கப்பூரில் உங்களுக்கு உடனே வேலை வாங்கணுமா? அதுக்கு Higher Skill தான் இருக்கணும்… நச்சுனு நாலு வழி இருக்கு! வாழ்க்கையும் ஜம்முனு இருக்கும்!

சிங்கப்பூரில் வேலை பார்த்து கொண்டிருக்கும் பலருக்கும் நிறைய சம்பளம் வாங்க வேண்டும் என்ற ஆவல் இருந்து கொண்டு தான் இருக்கும். அதற்கு நிறைய வழிகளில் முயற்சி எடுப்பார்கள். இதில் construction துறைகளில் இருக்கும் ஊழியர்கள் basic skillல் இருந்து higher skill மாறினால் அவர்களுக்கு வாய்ப்புகள் பெருகும். அதற்கு ஒரு வழி இல்லை நான்கு வழி இருக்கு. ஒன்ன பிடிங்க ஈசியா மாறிடுங்க.

basic skill ஊழியர்கள் என்பவர்கள் இந்தியாவில் இன்ஸ்டியூட்களில் skill முடித்து விட்டு வொர்க் பெர்மிட்டில் வேலைக்கு வருபவர்கள். இவர்களுக்கு லெவி கட்டணம் 700 சிங்கப்பூர் டாலர் வரை கேட்கப்படும். Higher skill முடித்தால் அவர்களுக்கு லெவி கட்டணம் பாதியாக குறைக்கப்பட்டு விடும். அதிலும் இல்லாமல் சிங்கப்பூரில் 26 வருடம் கூட தொடர்ந்து வேலை செய்ய முடியும்.

Basic ஊழியர்கள் Higher skill மாற:

CoreTrade:

சிங்கப்பூரில் வேலைக்கு சேர்ந்து வேலை செய்து கொண்டிருக்கும் ஊழியர்கள் 4 வருட பணி அனுபத்தினை பெற்று விட்டால் coretrade கோர்ஸ் முடிக்கலாம். இதன்மூலம், உங்களால் higherskill ஊழியராக மாற முடியும். சம்பள உயர்வும் கூட கிடைக்கும். இந்த கோர்ஸினை முடிக்க அதிகப்பட்சமாக 1350 சிங்கப்பூர் டாலருக்குள் செலவுகள் இருக்கும். ஆனால் இந்த கோர்ஸில் சேர கண்டிப்பாக உங்களுக்கு சிங்கப்பூர் பணி அனுபவம் தேவைப்படும். உடனே செய்து விட முடியாது. அடிப்படை சம்பளம் என்பது இதில் கிடையாது.

இதையும் படிங்க: சிங்கப்பூருக்கு skilled டெஸ்ட் முடிச்சிட்டு வேலைக்கு போறீங்களா? ப்ரொமோஷனுடன் அதிக சம்பளம் வேணுமா? coretrade முடிச்சால் போதும்.. லைஃப் பாதுகாப்பா இருக்கும்!

கம்பெனியின் ஒப்புதலுடன் இந்த டெஸ்ட்டினை முடித்தவுடன் உங்களின் ரிசல்ட்டினை bca தரப்பில் இருந்து MOMக்கு அனுப்படும். உங்களின் லெவி கட்டணம் குறைக்கப்பட்டு விடும்.

Multi-Skilling Scheme:

இந்த முறையில் higher skill மாற நினைப்பவர்களுக்கு குறைந்தபட்சம் 4 வருட சிங்கப்பூர் பணி அனுபவம் இருக்க வேண்டும். அடிப்படை சம்பளம் என்ற கட்டுப்பாடு எதுவும் கிடையாது. 4 வருட அனுபவம் பெற்றவுடன் சிங்கப்பூரில் இரண்டாவது skill முடிக்க வேண்டும். இல்லையென்றால், அங்கீகரிக்கப்பட்ட safety கோர்ஸ் செய்யலாம். NParks’ LCRன் கீழ் பதிவு செய்யப்பட்ட நிறுவனத்தில் வேலைக்கு சேரும் ஊழியர்களாக இருந்தால் higher skill ஊழியராக கருதப்படுவார்கள்.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் உங்க சம்பளம் $1600-ஆக இருக்கா… உங்களுக்கு R1 விண்ணப்பிக்க இதுதான் நல்ல வாய்ப்பு… அதுக்கு முன்னாடி R1 பத்தி தெரிஞ்சிக்கலாம் வாங்க

Direct R1 Pathway:

இந்த முறைகளில் Higher skill ஊழியராக வர நினைப்பவர்கள் இந்தியாவில் இருந்து வரும் போது Skill முடித்திருக்க வேண்டும். சிங்கப்பூர் பணி அனுபவம் தேவைப்படாது. ஆனால் உங்களின் அடிப்படை சம்பளம் கண்டிப்பாக 1600 சிங்கப்பூர் டாலராக இருக்க வேண்டும்.

Market-Based Skills Recognition Framework (MBF)

சிங்கப்பூரில் higher skill ஊழியராக வேண்டும் என நினைப்பவர்கள் எந்த Skill அல்லது கோர்ஸ் என எதுவும் தேவைப்படாது. ஆனால் குறைந்தபட்சம் 1600 சிங்கப்பூர் டாலர் சம்பளத்துடன் சிங்கப்பூரில் 6 வருட பணி அனுபவம் இருக்க வேண்டும். இதை MBF எனக் குறிப்பிடுவர்.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts