TamilSaaga

சிங்கப்பூரில் Work Permit-ல் வேலை பார்ப்பவரா நீங்க? S Pass-க்கு ஈஸியா மாறுவது எப்படி? இதை க்ளிக் பண்ணுங்க.. பெரிய சம்பளத்துக்கு மாறுங்க!

சிங்கப்பூரில் வொர்க் பெர்மிட்டில் வேலைப் பார்க்கும் பெரும்பாலானோர் S-pass-க்கு எப்படியாவது மாறினால் நன்றாக இருக்கும் என்று நினைப்பதுண்டு. காரணம், சம்பளம். ஆம்! S-pass-ல் அதிக சம்பளம், அதிக சலுகை கிடைக்கிறது.

சரி.. S-Pass-க்கு மிக முக்கியம் நீங்கள் குறைந்தது டிகிரி அல்லது டிப்ளமோ முடித்து வைத்திருக்க வேண்டும். ஆனால், குடும்ப சூழல் காரணமாக நம்மில் பலராலும் டிகிரி முடிக்க முடியாமல் போயிருந்திருக்கலாம். கவலைய விடுங்க. நாம் பிறக்கும் போது வறுமையோடு பிறந்திருக்கலாம். ஆனால், வாழும் போதும், இறக்கும் போதும் நாம் எப்படி இருக்க வேண்டும் என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும்.

ஸோ, படிக்க முடியவில்லையே.. டிகிரி இல்லையே என்றெல்லாம் கவலை வேண்டாம். நீங்கள் பள்ளிப் படிப்பை முடித்திருந்தால் போதும்.. சிங்கப்பூரிலேயே நீங்கள் டிப்ளமோ படிக்க முடியும். வாரத்தில் 3 முதல் 4 நாட்கள் வரை நடக்கும் பகுதி நேர கல்லூரிகளில் சேர்ந்து நீங்கள் எளிதாக, குறைந்த கட்டணத்தில் டிப்ளமோ முடிக்க முடியும். மாலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை இதற்கான வகுப்புகள் நடைபெறும்.

தனியார் கல்லூரிகள்:
INSEAD – Singapore
PSB Academy
Nanyang Institute of Management

மேலே குறிப்பிடப்பட்டுள்ள இந்த தனியார் கல்லூரிகள் சிங்கப்பூரின் ரேங்கிங் பட்டியலில் டாப் இடங்களில் உள்ளன. இங்கே கட்டணம் சற்று அதிகமாக இருந்தாலும், எப்படியாவது மற்ற செலவுகளை குறைத்து படிப்பை முடித்துவிட்டால், உங்கள் வாழ்க்கை செட்டில் ஆவது உறுதி.

அப்போது தான் நீங்கள் S-Pass-க்கு விண்ணப்பிக்க முடியும். மற்ற நிறுவனங்களில் S-Pass-க்கு ஏற்ற பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வில் உங்களால் கலந்து கொள்ள முடியும்.

S-Passக்கான தகுதி:

S-Pass-க்குத் தகுதிபெற, விண்ணப்பதாரர் பின்வரும் நிலைகளை எட்டியிருக்க வேண்டும்.

சிங்கப்பூரைச் சேர்ந்த நிறுவனத்திடம் இருந்து வேலைக்காக ஆர்டர் பெற்றிருக்க வேண்டும். வேலை வாய்ப்பைப் பெறுங்கள்.
அதில் குறைந்தபட்சம் 2,500 சிங்கப்பூர் டாலர்கள் மாத சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டிருக்க வேண்டும்.
வேலைக்குத் தேவையான தகுதிகள் மற்றும் பணி முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஏற்றுக்கொள்ளக்கூடிய கல்வி மற்றும்/அல்லது வேலை தொடர்பான முன் அனுபவ ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும்.
மனிதவள அமைச்சகம் (MOM) நடத்தும் மருத்துவ பரிசோதனையில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.

S Pass-க்கான விண்ணப்ப செயல்முறை:

வேலைக்கான தகுதி அளவுகோல்களை நீங்கள் எட்டினால், எஸ் பாஸுக்கு விண்ணப்பிப்பதற்கு பின்வரும் நடைமுறைகளைத் தொடரலாம்:

1, MOM இணையதளம் அல்லது மொபைல் அப்ளிகேஷன் மூலம் தேர்வு செய்யப்பட்ட ஊழியரின் சார்பாக S Pass-க்கு அந்த நிறுவனம் விண்ணப்பிக்க வேண்டும்.

2, பிறகு ஊழியரின் தகுதிகள், சம்பளம், பணி அனுபவம் மற்றும் பிற தொடர்புடைய காரணிகளின் அடிப்படையில் MOM அந்த விண்ணப்பத்தை பரிசீலிக்கும்.

3, விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டால், S Pass இன் நிபந்தனைகளை குறிப்பிட்டு தேர்வு செய்யப்பட்ட ஊழியருக்கு, IPA கடிதத்தை அந்த நிறுவனம் வழங்க வேண்டும்.

4, பிறகு, அந்த ஊழியர் சிங்கப்பூரின் குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையத்திற்கு (ICA) சென்று தனது S Pass-ஐ பெற்றுக் கொண்டு, கைரேகை பதிவு செய்து மற்றும் புகைப்படம் எடுக்க வேண்டும்.

5, பிறகு, சிங்கப்பூரில் உள்ள MOM மூலம் அங்கீகரிக்கப்பட்ட கிளினிக்கில் அந்த ஊழியர் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

6, மருத்துவப் பரிசோதனை முடிந்ததும், எஸ் பாஸ் வழங்கப்படும். பிறகு, ஊழியர் தனது புதிய பணியைத் தொடங்கலாம்.

Related posts