சிங்கப்பூரில் உள்ள நிறுவனங்கள் சிறப்பு திட்டத்தின் மூலம் அவ்வப்போது பல தொழிலாளர்களை மிகுந்த பாதுகாப்போடு சிங்கப்பூருக்கு அழைத்து வருகின்றது. இந்நிலையில் அவ்வாறு அழைத்துவரப்படுபவர்கள் எப்படி அழைத்துவரப்படுகின்றனர் என்பது குறித்தும் அவர்கள் என்னென்ன செய்யவேண்டும் என்பது குறித்து தகவல்கள் சில வெளியாகியுள்ளது.
தொழிலாளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள படிவத்தில் தங்கள் தகவல்களை முழுமையாக பதிவிட வேண்டும்.
தொழிலாளியின் சொந்த நாட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நேரம் உறுதி செய்யப்படும் ஒரு வார காலத்திற்கு முன், அவர்களுக்கு பெருந்தொற்று சோதனை வீட்டிற்கு வந்தே மேற்கொள்ளப்படும். தொற்று இருந்தால் அவருக்கான பணிகுறித்த செயல்முறை நிறுத்தப்படும். எதிர்மறையாக இருந்தால், தொழிலாளர் ஒரு வாரத்திற்கு தனது சொந்த வீட்டில் தனிமைப்படுத்தப்படுவார்.
ஒரு வாரத்திற்குப் பிறகு, தனிமைப்படுத்தப்பட்ட விடுதிக்கு தொழிலாளியை அழைத்து வருவார்கள், தனிமைப்படுத்தல் முடிந்ததும், மீண்டும் பெருந்தொற்று சோதனை நடக்கும். தொற்று இருந்தால் அவருக்கான பணிகுறித்த செயல்முறை நிறுத்தப்படும் மேலும் தொழிலாளி வீடு திரும்புவார். எதிர்மறையாக இருந்தால், தொழிலாளி சிங்கப்பூருக்கு வர ஏற்பாடு செய்யப்படும்
சிங்கப்பூர் வந்த பிறகு, தேவையான தனிமைப்படுத்தல் மற்றும் முழுமையான வேலை தேர்ச்சி நடைமுறையை முடிக்கவேண்டும். அதன் பிறகு தொழிலாளி வேலையைத் தொடங்கலாம். தொழிலாளியின் சொந்த நாடு மற்றும் சிங்கப்பூரில் தனிமைப்படுத்தல் கட்டணம், அனைத்தும் நிறுவனத்தால் செலுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பு : தனிமைப்படுத்துதலின் வசத்தில் இல்லாத மாவட்டத்தில் தொழிலாளி வசிக்கும் நிலையில் அதற்கான வசதி உள்ள இடத்திற்கு தொழிலாளி செல்ல வேண்டும். அதன் பிறகு, பைலட் திட்டத்தின் நடைமுறை தொடங்கப்படும்.
நமது TamilSaaga சிங்கப்பூர் செய்தி நிறுவனத்திற்கு நம்பத்தகுந்த சில இடங்களில் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த செய்தி பகிரப்பட்டுள்ளது.