சிங்கப்பூரில் வேலைப்பார்க்கும் ஊழியர்கள், தங்கள் குடும்பத்தினரை ஒருமுறையாவது சிங்கை அழைத்து வந்து சுற்றிக் காட்ட வேண்டும் என்று நினைப்பதுண்டு.. நினைப்பு என்பதைத் தாண்டி, அது ஒவ்வொருவரின் ஆசை என்றும் கூறலாம்.
“அட போங்க சார்… நாங்க வாங்குற சம்பளத்துல எங்கிருந்து குடும்பத்தை சிங்கப்பூருக்கு கூட்டியாந்து காட்டுறது”? என்று நீங்கள் சலித்துக் கொள்பவர்களாக இருந்தால், இந்த செய்தியே உங்களுக்காக தான்.
நீங்க சிங்கப்பூருக்கு வந்து ஜஸ்ட் ஒரு மாதம் ஆனாலும் சரி… ஒரு வருடம் ஆனாலும் சரி.. உங்களால் உங்கள் குடும்பத்தை சிங்கைக்கு அழைத்து வர முடியும். அதற்கு உங்களுக்கு கைக்கொடுக்கும் விசா தான் “Visit Visa’.
முதலில் இந்த விசிட் விசா எடுக்க, இன்றைய தேதிப்படி (ஜன.21) என்னென்ன ஆவணங்கள் தேவை என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Original Pass Port Valid 6 Month
Vaccine Certificate
6 Month Bank statement
Pass Port Size Photo
Working ID Proof
Or
Business Proof
Ticket
Return Ticket
SG Arrival Submission
Singapore Address
மேலே குறிப்பிடப்பட்டுள்ள இந்த ஆவணங்கள் அனைத்தும், விசிட் விசா அப்ளை செய்வதற்கு கண்டிப்பாக தேவை. (Note: தற்போது கோவிட் அதிகரித்து வருவதால், இந்த ஆவணங்களில் எப்போது வேண்டுமானாலும் மாற்றங்கள் வரலாம் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்)
சரி… இப்போ விமான டிக்கெட் விலைக்கு வருவோம்…
முதலில், சிங்கப்பூருக்கு உங்கள் குடும்பத்தை அழைத்து வர நீங்கள் விரும்பினால், எக்காரணத்தை முன்னிட்டும் பண்டிகை நாட்களில் அந்த பிளானை போட்டு விடாதீர்கள். கையில் உள்ள சேமிப்பு அனைத்தும் கரைந்துவிடும். விமான டிக்கெட் விலையில் இருந்து சிங்கப்பூரில் தங்கும் ஹோட்டல் விலை வரை எல்லாமே தாறுமாறாக இருக்கும். ஆகையால், பண்டிகை நாட்கள், பொது விடுமுறை நாட்கள் மற்றும் சனி, ஞாயிறு போன்ற வார இறுதி நாட்களில் இந்த பிளானை போடவே வேண்டாம்.
திங்கள் டூ வியாழக்கிழமை-களில் ஏதேனும் நாட்களை தேர்வு செய்து உங்கள் குடும்பத்தை சிங்கை அழைக்க பிளான் போடுங்க. பக்காவான Working Days-ஆன இந்த நாட்களில் தான், உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ப நீங்கள் செலவு செய்ய முடியும்.
அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம்… விசிட் விசாவில் உங்கள் குடும்பத்தையே அழைத்து வரும் போது, லிட்டில் இந்தியாவில் உள்ள விடுதிகளில் அறைகள் எடுக்க முயற்சி செய்யுங்கள். ஏனெனில், மற்ற இடங்களுடன் ஒப்பிடுகையில், லிட்டில் இந்தியாவில் தங்கும் வசதிக்கான விலை சற்று குறைவு. தோராயமாக 200 டாலர்களில் (ஒரு நாள்) கூட உங்கள் குடும்பத்தை நீங்கள் தங்க வைக்க முடியும்.
விமான டிக்கெட் விலையை பொறுத்தவரை, நாம் முன்பே சொன்னது போல் பண்டிகை அல்லது விடுமுறை நாட்களில் சிங்கை வர வேண்டாம். அதேபோல், சிங்கை வந்த பிறகு, பொதுப் போக்குவரத்தை முழுவதுமாக உபயோகிப்பது நல்லது. பேருந்துகள் மற்றும் MRT ரயில்களில் பயணிப்பதால், உங்கள் பயண செலவு கணிசமாக குறையும். சற்று சிரமம் தான்.. ஆனாலும், உங்கள் மொத்த பட்ஜெட் குறைவாக இருக்கும் பட்சத்தில், பொதுப் போக்குவரத்தே சிறந்தது.
விமான டிக்கெட் உள்ளிட்ட இதர விவரங்களை தெரிந்து கொள்ள Call
நந்தனா ஏர் டிராவல்ஸ்
திருச்சி விமான நிலையம், திருச்சி 620 007
97 91 477 360
“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் பெற எங்களது முகநூல் பக்கத்தை Follow பண்ணுங்க”