சிங்கப்பூரின் பொருளாதாரம் கடந்த 2021ம் ஆண்டில் இந்த தொற்றுநோய்க்கு மத்தியில் 7.2 சதவிகிதம் வளர்ந்தது என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளது. மேலும் கடந்த 10 ஆண்டுகளில், அதாவது 2010க்கு பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய வளர்ச்சி இதுவென்று கூறப்படுகிறது. நமது சிங்கப்பூரில் பொருளாதாரம், கடந்த 2020ம் ஆண்டில் ஏற்பட்ட மந்தநிலையிலிருந்து மீண்டு வருகிறது என்று வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் (MTI) நேற்று திங்கள்கிழமை (ஜனவரி 3) வெளியிட்ட மதிப்பீடுகள் காட்டுகின்றன. சிங்கப்பூரின் பொருளாதாரம் 2020ல் 5.4 சதவீதம் என்ற அளவுக்கு சுருங்கியது. கடந்த 2001 முதல் கணக்கிடும்போது இது நமது சிங்கப்பூரின் முதல் வருடாந்திர சுருக்கம் மற்றும் சுதந்திரத்திற்குப் பிறகு நாட்டின் மோசமான மந்தநிலை என்றே கூறப்பட்டது.
இந்நிலையில் கடந்த ஆண்டு, சிங்கப்பூர் உள்ளூர் பெருந்தொற்றின் தாக்கத்துடன் வாழ்வதற்கான மாற்றத்தின் தொடக்கத்தை அறிவித்தது. மேலும் நமது சிங்கப்பூரின் தடுப்பூசி திட்டம் பூஸ்டர் ஷாட்கள் மற்றும் அதிக வயதினரை உள்ளடக்கியதாக அதிகரிக்கப்பட்டது. மேலும் கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கைகளும் நாடுமுழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டன. இதனையடுத்து திங்களன்று அறிவிக்கப்பட்ட மதிப்பீடுகள் கடந்த ஆண்டு நவம்பரில் MTIன் மதிப்பீடுகளை பூர்த்தி செய்தன. 2021ம் ஆண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி கணிப்பை அமைச்சகம் “சுமார் 7 சதவீதமாக” குறைத்துள்ளது.
கடந்த 2021ம் ஆண்டின் நான்காவது காலாண்டில் GDP ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 5.9 சதவிகிதம் வளர்ச்சியடைந்தது, முந்தைய காலாண்டில் 7.1 சதவிகிதம் விரிவாக்கத்தில் இருந்து மிதமானது என்று ஆரம்பக்கட்ட தரவுகள் காட்டுகிறது. அதேபோல சிங்கப்பூரில் உற்பத்தி செயல்திறன் என்பது நான்காவது காலாண்டில் ஆண்டுக்கு ஆண்டு 14 சதவீதம் மேம்பட்டுள்ளது. மூன்றாம் காலாண்டில் 7.9 சதவீதத்தில் இருந்து வேகம் அதிகரித்தது என்று MTI தெரிவித்துள்ளது, மொத்தத்தில் இந்தத் துறை முழு வருடத்தில் 12.8 சதவீதம் விரிவடைந்துள்ளது.
2021ன் கடைசி மூன்று மாதங்களில் வளர்ச்சி அனைத்து கிளஸ்டர்களிலும் வெளியீடு விரிவாக்கங்களால் ஆதரிக்கப்பட்டது, என்று MTI தெரிவித்துள்ளது. குறிப்பாக எலக்ட்ரானிக்ஸ் மற்றும் துல்லியப் பொறியியல் தொடர்ந்து வலுவான வெளியீட்டு வளர்ச்சியைப் பதிவுசெய்தது, முறையே Semi Conductors மற்றும் Semi Conductors உபகரணங்களுக்கான உலகளாவிய தேவையால் இது இயக்கப்படுகிறது என்று அமைச்சகம் மேலும் கூறியது குறிப்பிடத்தக்கது.