சிங்கப்பூரில் பல விதமான குடியிருப்புகள் உள்ளன. அதில் HDB பிளாட் எனப்படும் அரசாங்கத்தால் கட்டமைக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் ஆகும். இதில் பல ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். சிங்கப்பூர் முழுவதும் இந்த பிளாட்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த பிளாட்களை வாங்கவும் விற்கவும் கடந்த மே மாதம் முதல் HDB தனது நேரடி மேற்பார்வையின்கீழ் ஒரு அதிகாரபூர்வ தளத்தை வெளியிட்டுள்ளது. அதில் தங்கள் பிளாட்களை விற்க நினைப்பவர்கள் தங்கள் பிளாட்களைக் குறித்த விவரங்களைப் பதிவிடலாம். பிளாட்களை வாங்குபவர்கள் அதில் சென்று பிளாட்களை புக் செய்து விசிட் செய்தபின் அதனை வாங்கலாம்.
இதில் எந்தவிதமான மோசடிகளும் நடந்துவிடக் கூடாது என்பதற்காக சில விதிமுறைகளையும் HDB வகுத்துள்ளது. அதன்படி பட்டியலிடப்டுள்ள வீடுகளை மட்டுமே இதில் பதிவிட முடியும். ஒருவேளை தவறான தகவல்கள் பதிவிடப்பட்டிருந்தால் அந்த வீட்டின் விற்பனை அறிவிப்பை எந்த நேரமும் நீக்க HDB-க்கு அதிகாரம் உள்ளது.
அதன்படி தற்பொழுது ஏறத்தாழ 50 வீடுகளை HDB தளத்திலிருந்து நீக்கியுள்ளது. அதீத விலை மற்றும் தவறான தகவல்கள் பதிவிடப்பட்டிருந்ததால் அவற்றை நீக்கியுள்ளது HDB நிர்வாகம்.
மொத்த பட்டியலில் 5% இது போன்ற தவறான தகவல் பதிவிடப்பட்டிருக்கிறது. எவ்வளவு விலை நிர்ணயம் செயயப்பட்டிருந்தது என்பது குறித்த தகவலை HDB வெளியிடவில்லை.
HDB-ன் இந்த நடவடிக்கை மூலம் தவறான தகவல்கள் மற்றும் அதன் மூலம் நடக்கும் மோசடிகள் போன்றவற்றை தடுக்க இயலும்.
இது வரை இந்த HDB தளத்தை ஆயிரக்கணக்கான மக்கள் பார்வையிட்டுள்ளனர். வீடு வாங்கவும் விற்கவும் நினைக்கும் மக்களுக்கு இடையே ஒரு வலுவான இணைப்பை உருவாக்குவதே இதன் நோக்கம்.
இந்த தளமானது HDB-ன் நேரடி கட்டுப்பாட்டில் இருப்பதால், தவறான தகவல்கள், மோசடிகள் போன்ற தவறுகள் நடக்காமல் பார்த்துக் கொள்ள முடியும்.
அப்படி ஏதேனும் கண்டறியப்பட்டால் அந்த வீட்டின் பதிவை தளத்திலிருந்து உடனடியாக HDB நீக்கி விடும். இது போல் வீடு வாங்கும்பொழுது மோசடிகள் நடப்பது புதிதல்ல என்றாலும் அதனை இயன்றவரை தடுக்க HDB நிர்வாகம் கவனமாக செயல்படும்.
இந்த HDB தளத்தைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள நமது தமிழ்சாகா பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தியைப் பார்க்கவும். அதற்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
https://tamilsaaga.com/news/hdbs-new-service-to-sale-buy-flats/