TamilSaaga

“ஸ்டேஜ் 4 கேன்சர்.. இன்னும் 1 வருஷம் தான் என் வாழ்கை” : சிங்கப்பூரில் மனைவியின் எதிர்காலத்திற்காக போராடும் Hawker – பொதுமக்கள் உதவலாம்!

நான் போன பிறகும் நீ வாழ வேண்டும்.. இந்த வார்த்தைகளை தாய் மட்டும் தான் பிள்ளைகளிடம் சொல்லவேண்டும் என்பது இல்லை. கணவனும் தனது மனைவியிடம் கூறலாம் என்பதற்கு சான்றாக அமைந்துள்ளளது ஒரு சிங்கப்பூர் Hawkerன் வாழ்க்கை. சிங்கப்பூரில் Hawker United என்ற முகநூல் குழுவின் நிர்வாகியான மெல்வின் செவ், சமீபத்தில் ஒரு வயதான வியாபாரிகளின் கதையைப் பகிர்ந்துகொண்டார்.

“பெண்கள்ன்னா சும்மா இல்ல.. வாலை சுருட்டி வைக்கலனா பெண்டு கழட்டிடுவோம்” – சிங்கப்பூர் கணவர்களுக்கு அமைச்சர் சண்முகம் எச்சரிக்கை

அந்த வயதான வியாபாரிகள் ஒரு கணவனும் மனைவியும் என்பது குறிப்பிடத்தக்கது, கணவருக்கு உடல்நிலை சரியில்லாததால், மனைவி தற்போது அந்த கடையை கஷ்ப்பட்டு நடத்தி வருகின்றார். இதுகுறித்து கேள்விப்பட்டதும், மெல்வின் அவர்களை காண Circuit Road அருகே உள்ள குறிப்பிட்ட அந்த கடைக்கு சென்றுள்ளார். Katong laksa உள்பட பல வகை உணவுகளை அவர்கள் விற்பனை செய்வதை கண்டு ஆச்சாரமும் அடைந்துள்ளார்.

மெல்வின் அங்கு சென்று வெளியிட்டTikTok பதிவில் தான் அந்த கணவர் தற்போது ஸ்டேஜ் 4 புற்றுநோயால் அவதிப்பட்டு வருவது தெரியவந்துள்ளது. இந்த ஜோடியை நேரில் சென்று பார்த்த மற்றொருவர் வெளியிட்ட தகவலில் “அந்த நபருக்கு வழங்கப்படும் கீமோதெரபி அவருக்கு பலன்களை அளிக்காத நிலையில் அவரது வாழக்கை இன்னும் ஓராண்டு தான்” என்ற சோகமான தகவலையும் பகிர்ந்துள்ளார்.

இந்த ஹாக்கர் ஸ்டாலை அமைக்க உதவுவதன் மூலம், அவர் இறப்புக்கு பின் தன் மனைவியை ஆதரிக்கும் வகையில் எதையாவது விட்டுச் செல்லமுடியும் என்று அவர் நம்புகிறார். என்னால் எவ்வளவு காலம் முடியுமோ அது வரை வாழ்ந்து எனது மனைவியின் எதிர்காலத்துக்கு உதவுவதே இப்பொது எனக்கு இருக்கும் ஒரே கடமை என்று கூறுகின்றார் அந்த கணவர்.

ஷங்கர் பட பிரம்மாண்டத்தை மிஞ்சிய சிங்கப்பூர் வாலிபரின் “Love Proposal” – இப்படியொரு காதலை எதிர்பார்க்காத காதலி – வியந்து நின்ற Marina Bay பகுதி மக்கள்

பலரும் இந்த தம்பதிக்கு உதவுமாறும் கோரிக்கைகளை தற்போது முன்வைத்து வருகின்றனர், 88 Katong Laksa என்ற அந்த கடை Blk 79 Circuit Road Hawker Center பகுதியில் உள்ளது என்றும் காலை 8 முதல் இரவு 8 மணி வரை இந்த கடை செயல்படும் என்றும் கூறுகின்றனர். மனைவியின் எதிர்காலத்திற்காக சாவின் விளிம்பில் நின்று போராடும் இந்த கணவருக்கு உதவு பலரும் முன்வர வேண்டும் என்றும் மெலிந்த கூறினார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts