சிங்கப்பூரில் கேஸ் மற்றும் மின்சார கட்டணங்கள் அடுத்த மூன்று மாதங்களுக்கு தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சாரத்தை தயாரிப்பதற்காக உபயோகப்படுத்தப்படும் கரிம பொருட்களை வெளியேற்றுவதற்கான வரி உயர்வு ,ஜி எஸ் டி மற்றும் எரிசக்தி செலவுகள் போன்றவை உயர்ந்துள்ளதால் மின்சார கட்டணம் மற்றும் காஸ் கட்டணம் போன்றவை உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி பார்த்தால் ஜனவரி முதல் மார்ச் 31 வரை எஸ் பி குழுமம் வீடுகளுக்கு மின்சார கட்டணம் ஆனது ஐந்து சதவீதம் உயருமென தெரிவிக்கப்பட்டுள்ளது .அதாவது தற்பொழுது ஒரு கிலோ வாட் மணி நேரத்திற்கு 31 பைசா என இருக்கும் மின்சாரம் ஆனது 32.58 பைசா என அதிகரிக்கும். அது மட்டுமில்லாமல் எரிவாயு கட்டணமும் நாலு காசுகள் உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் தயாரிக்கும் கரிம பொருட்களை வெளியேற்றுவதற்கான வரி இப்பொழுது ஐந்து டாலர் என இருக்கும் பட்சத்தில் 25 டாலராக அதிகரித்ததே இந்த உயர்வுக்கு காரணம் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.