அதன் 50வது ஆண்டினை நிறைவு செய்யும் நிலையில் அந்த நிறைவைக் கொண்டாடும் வகையில், சிங்கப்பூரின் ஸ்காட்ஸ் சாலையில் அமைந்துள்ள கிராண்ட் ஹயாட் சிங்கப்பூர், இரண்டு வருட சீரமைப்புத் திட்டத்தைத் தொடங்கப் போவதாக அறிவித்துள்ளது. புனரமைப்பு, உள்கட்டமைப்பு மற்றும் வடிவமைப்பு மேம்படுத்தல்கள் மற்றும் ஹோட்டலின் விருந்தினர் அறைகள், தேர்ந்தெடுக்கப்பட்ட உணவகங்கள், டமாய் ஸ்பா & ஃபிட்னஸ் மையம் மற்றும் ஆரோக்கிய பகுதிகளை மறுவடிவமைப்பதாக ஹோட்டல் நிர்வாகம் ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
இந்த புனரமைப்பு திட்டம் இம்மாதம் முதல் தொடங்குகிறது, இதன் ஒரு பகுதியாக “The Terrace Wings” (பிரதான ஹோட்டலில் இருந்து ஒரு தனி பிரிவு) என்ற பகுதி அமைக்கும் பணி தொடங்கவுள்ளது. டமாய் ஸ்பா & உடற்பயிற்சி மையம் மற்றும் நீச்சல் குளம் ஆகியவை இதில் அடங்கும். NAO Taniyama அசோசியேட்ஸ் மற்றும் ஸ்டிரிக்லேண்டால் வடிவமைக்கப்பட்ட புத்தம் புதிய அம்சங்களுடன் இந்த, The Terrace Wing வேலைகள் முடிந்ததும். Grand Hyatt சிங்கப்பூரின் புதிய பிரிவாக அது மீண்டும் தொடங்கப்படும்.
ஐந்து மாடி தோட்டம் மற்றும் நீர்வீழ்ச்சி, விருந்தினர் அறைகளில் ஓய்வெடுக்கும் படுக்கைகள், வெளிப்புற நிகழ்வு நடைபெறும் இடங்கள் மற்றும் புதிய டமாய் ஸ்பா & ஃபிட்னஸ் மையத்திற்கு வெளிப்புற உடற்பயிற்சி பகுதி நீட்டிப்பு ஆகியவை இந்த புதிய அம்சத்தில் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முதற்கட்ட பணியானது வரும் 2023ம் ஆண்டின் முதல் காலாண்டில் முடிவடையும் என்று ஹோட்டல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில் கிராண்ட் ஹயாட் முதன்முதலில் 1971ல் அதன் சேவைகளை வழங்க தொடங்கியது. பின்னர் ஹையாட் ரீஜென்சி சிங்கப்பூர் என்று அழைக்கப்பட்டது. ஹையாட் இன்டர்நேஷனல் 700 அறைகளுடன் திறக்கப்பட்ட மிகப்பெரிய ஹோட்டலாகும்.