TamilSaaga

“சிங்கப்பூரில் நெருங்கி வரும் தீபாவளி” : பெருந்தொற்று நெருக்கடியால் லிட்டில் இந்தியாவில் வியாபாரம் மந்தம்

வெளிச்சத்தின் திருவிழாவான தீபாவளி நெருங்கிவிட்டாலும், சிங்கப்பூரின் லிட்டில் இந்தியாவிலுள்ள வணிகங்கள் தற்போதைய பெருந்தொற்று கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் விற்பனை மந்தமாகவே இருந்து வருவதாக வியாபாரிகள் தெரிவித்து வருகின்றனர். கடந்த ஆண்டு பண்டிகைக் காலத்துடன் ஒப்பிடுகையில், சமூகக் ஒன்றுகூடல்களில் குறைவான கட்டுப்பாடுகள் மட்டுமே அமலில் உள்ளபோதும், ​​மக்கள் கூட்டம் வெகுவாகக் குறைந்துள்ளது என்று CNAவிடம் பேசிய ஸ்டால் ஹோல்டர்கள் தெரிவித்தனர்.

சிங்கப்பூரின் பெருந்தொற்று கட்டுப்பாடுகள் முதலில் அக்டோபர் 24 வரை நீடிக்கும் என்று திட்டமிடப்பட்டது, ஆனால் நாட்டில் நிலவிய பெருந்தொற்று சூழல் காரணமாக வரும் நவம்பர் 4 அன்று வரும் தீபாவளி விடுமுறையை உள்ளடக்கி மேலும் ஒரு மாதத்திற்கு நாட்டில் அமலில் உள்ள கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த விதிகளின் கீழ், சமூகக் கூட்டங்கள் ஒரு குழுவிற்கு இருவர் என்று வரையறுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து CNAவிடம் பேசிய கடைக்காரர் ஒருவர் “பண்டிகை மனநிலை எல்லோரிடமும் உள்ளது, ஆனால் குறைந்துவிட்ட வருவாய் மற்றும் அதிகரிக்கும் தொற்று காரணமாக அனைவரும் கவலைப்படுகிறார்கள்.” என்று கூறினார். அதே நேரத்தில் கேம்ப்பெல் லேனில் உள்ள அங்காடி, தொழிலாளர்களை வெளிநாடுகளில் இருந்து வரவழைக்க முடியாததால், மனிதவள நெருக்கடியை எதிர்கொள்கிறது. என்று மற்றொரு வியாபாரி தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

இருப்பினும் சென்ற ஆண்டை போல இல்லாமல் மக்கள் கூட்டம் எதிர்வரும் காலங்களில் அதிகரித்து டீ தங்கள் வாழ்வாதாரம் காக்கப்படும் என்று வியாபாரிகள் நம்பிக்கையுடன் நாட்களை நகர்த்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts