TamilSaaga

சிங்கப்பூரில் கோலாகலமாக நடைபெற்ற ஶ்ரீ சிவ-கிருஷ்ண ஆலய குடமுழுக்கு விழா… பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!!

சிங்கப்பூரில் ஸ்ரீ சிவா கிருஷ்ணா கோவில் என்பது சிங்கப்பூரில் உள்ள ஒரு முக்கியமான இந்து கோவிலாகும். இது சிவபெருமான் மற்றும் திருமாலின் அவதாரங்களில் ஒருவரான கிருஷ்ணனை இணைத்து வழிபடும் ஒரு தனித்துவமான கோவில்.

இந்த ஆலயத்தின் குடமுழுக்கு சிறப்பாக நடைபெற்றது. அதிகாலை 4 மணிக்கெல்லாம் பக்தர்கள் ஆலயத்திற்கு வரத் தொடங்கினர். காலை 8 மணியளவில் புனித நீர் நிரப்பப்பட்ட கடம் புறப்பட்டுச் சென்றது. சரியாக 9 மணிக்குக் குடமுழுக்கு விழா ஆரம்பமானது. வேத மந்திரங்கள் ஒலிக்க, மூன்றடுக்கு கோபுரத்தின் ஏழு கலசங்களிலும் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு செய்யப்பட்டது.

நிகழ்ச்சியில் பிரதமர் லாரன்ஸ் வோங் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். குடமுழுக்கு விழாவைத் தொடர்ந்து, அவர் மூல தெய்வங்களின் பூஜைகளிலும் கலந்துகொண்டார். இது கோயிலின் மூன்றாவது குடமுழுக்கு விழா – இதற்கு முன்பு 1996 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளில் குடமுழுக்கு விழா நடைபெற்றது.

சிங்கப்பூரில் உள்ள ஸ்ரீ சிவ-கிருஷ்ண ஆலயம் தான் ஸ்ரீ சிவனையும் ஸ்ரீ கிருஷ்ணனையும் ஒன்றிணைத்து ஸ்ரீ சிவ-கிருஷ்ணன் என்ற பிரதான தெய்வத்தைக் கொண்ட ஒரே ஆலயமாகும்.

கோவிலின் தலைமை அர்ச்சகர் ‘சிவாகம ரத்தினம்’ சா.நாகராஜ சிவாச்சாரியார் தலைமையில், சிங்கப்பூரின் பல்வேறு கோவில்களிலிருந்தும் தமிழ்நாட்டிலிருந்தும் வந்த 42 சிவாச்சாரியர்கள் இணைந்து குடமுழுக்கு விழாவை நடத்தினர்.

கூட்ட நெரிசல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள நூற்றுக்கணக்கான தொண்டூழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அன்னதானக் கூடத்தில் உணவு பரிமாறவும், கூட்டத்தைச் சமாளிக்கவும் 500க்கும் மேற்பட்ட தொண்டூழியர்கள் பங்களித்து பணியாற்றினர்.

இந்த விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். குடமுழுக்கு விழா முடிந்ததும், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகள் மிகவும் சிறப்பாக செய்யப்பட்டிருந்தன என்று பக்தர்கள் தெரிவித்தனர்.

சிங்கப்பூரில் ஸ்ரீ சிவா கிருஷ்ணா கோவிலின் வரலாறு

Related posts