உயர்தர வாழ்க்கைத் தரத்தைப் பூர்த்தி செய்வதற்காக தற்போதுள்ள தொழிலாளர் தங்குமிடங்களின் மறுசீரமைப்பை ஆதரிக்கும் திட்டத்தின் விவரங்கள் கிட்டத்தட்ட இரண்டு வருட ஆலோசனைகள் மற்றும் விவாதங்களுக்குப் பிறகு 2023ல் பின்னர் அறிவிக்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
இதுகுறித்து நேற்று மார்.20ல் பேசிய மனிதவள அமைச்சர் டான் சீ லெங் கூறுகையில், அதிகாரிகளின் இந்த திட்டம், தற்போதுள்ள உள்கட்டமைப்பு, படுக்கையின் அளவுகள், ஒரு அறைக்கு ஒதுக்கப்பட்ட எண்ணிக்கை மற்றும் தொழிலாளர்களின் வருகையின் தாக்கம் ஆகியவற்றை கணக்கில் எடுத்துக் கொண்டு இருக்கிறது.
இதையும் படிங்க: Skill இல்லாமல் சிங்கப்பூர் போகணும்… அதே சம்பளத்தில் போகணும்… கம்மி Agent கட்டணத்தில் போகணும்… அப்போ இந்த பாஸில் தான் போகணும்!
நாடு முழுவதும் உள்ள தொழிலாளர் தங்கும் டார்மெண்ட்ரிகள் எப்பொழுது உயர் தரத்தை எட்டுவது என்பது குறித்து காலக்கெடுவை கூறுங்கள் எனக் கேட்ட எம்.பி.க்களுக்கு அவர் பதிலளித்தார். அதில், ஊழியர்களின் தங்கும் அறையில் 15 பேருக்கு பதிலாக ஒவ்வொரு அறையிலும் 12 பேர் மட்டுமே இருக்க வேண்டும். கட்டாய என்-சூட் கழிப்பறைகள், காற்றோட்டமான அமைப்பு ஆகியவை அமைந்து இருக்க வேண்டியது கட்டாயமாக பார்க்கப்படுகிறது.
செப்டம்பர் 2021ல் அறிவிக்கப்பட்ட இந்த நிபந்தனைகள், புதிதாக கட்டப்பட்ட டார்ம்ஸ்களுக்கு மட்டுமே விதிக்கப்பட்டன. ஏற்கனவே செயல்பட்டு வரும் dorms பல்வேறு கட்டமாக புதுப்பிக்கப்படும் என்று மனிதவள அமைச்சகம் (MOM) கூறியது.
கோவிட் -19 தொற்றுநோய்க்கு சிங்கப்பூரின் பதில் குறித்த விவாதத்தின் போது பேசிய தொழிலாளர் கட்சியின் எம்.பி லியோன் பெரேரா தொற்றுநோயின் முந்தைய நாட்களில் வெளிநாட்டு தொழிலாளர் தங்குமிடங்களில் ஏற்பட்ட பரவலே அங்குள்ள நெருக்கடியான நிலைமைகளை அம்பலப்படுத்தியதாகக் கூறினார். மேலும், வாழ்க்கைத் தரத்தை உயர்த்த MOMன் நடவடிக்கை இருந்தபோதிலும், சிறிய தங்குமிடங்களுக்கு இன்னும் சீரற்ற அமலாக்கம் உள்ளது என்பதை வெளிநாட்டு தொழிலாளர்களின் கதைகள் காட்டுவதாகவே இருப்பதாக பெரேரா கூறினார்.
மேலும், எதிர் தரப்பில் தெரிவிக்கையில் dorms தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஒரு நபருக்கு 3.5 சதுர மீட்டர் மற்றும் 15 குடியிருப்பாளர்கள் பொதுவான கழிப்பறைக்கு அனுமதிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றார். இதற்குப் பதிலளித்த டாக்டர் டான், தொழிலாளர் தங்கும் விடுதிகளில் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த இன்னும் அதிகமாகச் செய்ய வேண்டும் என்பதை அரசாங்கம் ஒப்புக்கொள்வதாக கூறினார்.
ஏப்ரல் முதல், சுமார் 1,500 வெளிநாட்டு ஊழியர் தங்குமிடங்கள் Foreign Employee Dormitories Act கீழ் வர இருக்கிறது. தற்போது இந்த எண்ணிக்கை 53ஆக மட்டுமே இருக்கிறது. ஏழு அல்லது அதற்கு மேற்பட்ட படுக்கைகள் கொண்ட தங்குமிடங்களை உள்ளடக்கியதாக சட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சிங்கப்பூர் வேலைக்கு செல்ல இருக்கும் நபரா நீங்க… ஒரு நல்ல ஏஜென்ட் கண்டுபிடிக்க என்னென்ன செய்யணும்… ரொம்ப ரொம்ப முக்கியம் பாஸ் இது!
இது தவறான தங்குமிட ஆபரேட்டர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு MOMக்கு கூடுதல் அதிகாரத்தினை கொடுக்கும். இதில் குறைபாடுகளை சரிசெய்வதற்கான உத்தரவுகள் மற்றும் குறைபாடுகள் சரிசெய்யப்படும் வரை புதிய வாடகைதாரர்களை எடுக்க தடை உத்தரவுகள் அடங்கும். எங்கள் வெளிநாட்டு தொழிலாளர்களின் வாழ்க்கைச் சூழலின் தரத்தை மேம்படுத்துவதற்கான இந்த முயற்சிகள் தொழிலாளர் வாழ்க்கை முறையினை மாற்றும் என்று டாக்டர் டான் கூறினார்.
2022ம் ஆண்டின் இறுதியில் FWMOMCare செயலியில் புதிய அம்சம் சேர்க்கப்பட்டுள்ளதாக டாக்டர் டான் குறிப்பிட்டார். எனவே வெளிநாட்டு தொழிலாளர்கள் தாங்கள் சிக்கலை எதிர்கொள்ளும் போது MOM உடன் நேரடியாகப் பேசவும் உதவியை நாடலாம். வெளிநாட்டு தொழிலாளர்களின் ஆரோக்கியத்தை கண்காணிக்க அமைச்சகம் 2020ல் செயலியை உருவாக்கியது.