சிங்கப்பூரில் வேலைக்கு வர விரும்புபவர்களுக்காக நமது “தமிழ் சாகா சிங்கப்பூர்” தளம் சார்பில் பல்வேறு செய்திகள் வெளியிடப்பட்டு வருகிறது. இதன் மூலம் பயன்பெற்று நம்முடைய வாசகர்கள் பலர் சிங்கப்பூரில் வேலைக்கு வந்து கொண்டிருக்கின்றனர். குறிப்பாக, Skilled டெஸ்ட் குறித்தும் அது குறித்த பல முக்கிய தகவல்களையும் நாம் வெளியிட்டு வருகிறோம்.
அந்த வகையில், இன்று நாம் சிங்கப்பூருக்கு வர Electrical Skilled Test அடிப்பது குறித்து பார்க்கலாம். இந்த எலக்ட்ரிக்கல் டெஸ்ட்டில் மொத்தம் 3 புராஜெக்ட்ஸ் உள்ளது. இதில், முதல் கட்டமாக நீங்கள் செய்ய வேண்டியது கட்டணம் தான். ஆம்! இந்த Electrical Skilled Test-க்கு 2.30 முதல் 2.80 லட்சம் வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. எனினும், இந்த தொகையானது இன்ஸ்டிட்யூட் பொறுத்தும், உங்களது ஏஜெண்டை பொறுத்தும் மாறுபடலாம்.
இதில், டெஸ்ட் முடிப்பதற்கு மட்டும் தான் மேலே சொன்ன இந்த தொகை பொருந்தும். கம்பெனி போடுவதற்கு இன்னும் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். மொத்தமாக, டெஸ்ட் அடித்து சிங்கப்பூர் வர வேண்டுமெனில், உங்கள் கைகளில் 3.40 முதல் 4.50 லட்சம் வரை ரெடி செய்து வைத்துக் கொள்ள வேண்டியிருக்கும். எனினும், கட்டணத்தை அப்படியே முழுதாக செலுத்த வேண்டும் என்ற அவசியமில்லை. கொஞ்சம் கொஞ்சமாகக் கூட செலுத்தலாம். நீங்கள் இன்ஸ்டிட்யூட்டில் சேரும் போது ஒரு கட்டணமும், மெயின் டெஸ்ட் போகும் போது ஒரு கட்டணமும், டெஸ்ட் முடிந்து சர்டிஃபிகேட் வாங்கும் போது, மீத கட்டணத்தையும் நீங்கள் செலுத்தலாம்.
அதன் பிறகு கம்பெனி போட்டு IPA வந்த பிறகு, அதற்கும் கட்டணம் செலுத்த வேண்டும். எடுத்த உடனேயே 4.50 லட்சம் பணம் புரட்ட முடியவில்லை என்றாலும், டெஸ்ட் அடிப்பதற்கு தேவையான பணத்தை மட்டும் முதற்கட்டணமாக தயார் செய்து கொள்ளுங்கள். அதாவது, அதிகபட்சமாக 2.80 லட்சம் வரை கையில் வைத்துக் கொண்டு, முதலில் டெஸ்ட் அடித்து சர்டிஃபிகேட் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அதன்பிறகு, 2 மாதத்தில் முழு தொகையையும் ரெடி செய்து கம்பெனி போட்டுக் கொள்ளலாம்.
Electrical Skilled டெஸ்ட் இன்ஸ்டிடியூட்-களை பொறுத்தவரை, நீங்கள் சேரும் போதே, உங்களது ஒரிஜினல் பாஸ்போர்ட்டை அவர்களிடம் கொடுத்துவிட்டு, பணத்தை செலுத்த வேண்டும். பிறகு, அதற்கான ரசீதை வாங்கிக் கொள்ளுங்கள். பிறகு ட்ரெயினிங்கில் முதலில் தியரி வகுப்புகள் நடைபெறும். ஒரு மணி நேரம் தியரி வகுப்புகள் எடுக்கப்படும். இதன் தேர்வில் மொத்தம் 25 கேள்விகள் கேட்கப்படும். எல்லாமே Choose the best answer போன்று தான் இருக்கும். இதில், 25 கேள்விகளில் 13-க்கு நீங்கள் சரியாக பதில் எழுதிவிட்டாலே பாஸ் தான். இந்த தியரி தேர்வு எளிதாகவே இருக்கும். 45 நாட்களுக்கு நடக்கும் டிரெய்னிங் வகுப்புகளில், உங்களுக்கு அனைத்து பாடங்களும் சொல்லிக் கொடுக்கப்படும் என்பதால், நீங்கள் இந்த தியரி தேர்வில் வெற்றிப் பெறுவது என்பது மிக மிக எளிதாகவே இருக்கும்.
இந்த 25 கேள்விகளும் எப்படி இருக்கும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். சில Formulas, Safety தொடர்பான சில கேள்விகள், வயர் சம்பந்தமான கேள்விகள் என்று தான் இருக்கும். தியரி முடிந்த பிறகு, பிராக்டிகல் தேர்வு இருக்கும். இதுதான் மிகவும் முக்கியமான ஒன்று. தியரி தேர்வு வெறும் 1 மணி நேரம் மட்டுமே. ஆனால், Practical தேர்வு மொத்தம் 4 மணி நேரம் நடைபெறும்.
எனினும், இன்ஸ்டிடியூட்களில் நடைபெறும் கட்டிங் தேர்வில் நீங்கள் 3 முதல் மூன்றரை மணி நேரத்திற்குள்ளாகவே தியரி மற்றும் பிராக்டிக்கல் டெஸ்ட்டை முடித்தாக வேண்டும். அப்போதுதான் மெயின் டெஸ்டில் 4 மணி நேரத்தில் நீங்கள் சரியாக இரண்டு தேர்வுகளையும் முடிப்பீர்கள் என்ற நம்பிக்கை உங்கள் Trainer-கு ஏற்படும். அப்படி அவர்களுக்கு நம்பிக்கை வந்தால் மட்டுமே உங்களை மெயின் டெஸ்டுக்கு அனுப்புவார்கள். இல்லையெனில், உங்களை அனுப்பவே மாட்டார்கள். ஏனெனில், அப்படி மெயின் தேர்வில் நீங்கள் ஃபெயில் ஆனால், நீங்கள் செலுத்திய பணமும் காலி.. அந்த குறிப்பிட்ட இன்ஸ்டிட்யூட்டின் பெயரும் காலி.
இந்த மெயின் டெஸ்ட்டுக்காக சிங்கப்பூரில் இருந்து தான் கண்காணிப்பாளர்கள் வருவார்கள். அவர்கள் தான் உங்களை தேர்வுகளை மேற்பார்வை செய்வார்கள். தியரி தேர்வு முடிந்தவுடன் பிராக்டிகல் தேர்வுக்கு மொத்தம் 3 புராஜெக்ட்களில் ஏதேனும் ஒன்று உங்களுக்கு வரும். இந்த 3 புராஜெக்ட்களை தவிர்த்து pvc என்று சிறிய புராஜெக்ட்டையும் நீங்கள் செய்ய வேண்டும். இவை அனைத்தையும் நீங்கள் 4 மணி நேரத்திற்குள் செய்து முடிக்க வேண்டும்.
ஒட்டுமொத்தமாக Electrical Skilled Test-க்கு இதுதான் procedure என்பதால், இதனை முழுவதும் தெரிந்து கொண்டு டெஸ்ட் அடிக்க செல்லுங்கள். வெற்றி நிச்சயம்!