சிங்கபூரை சேர்ந்த Temasek Foundation நிறுவனம் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் அறிவிப்பில் ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு Oximeter கருவி இலவசமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
எந்த வித அறிகுறிகளும் இல்லாமல் வரும் Pneumonia காய்ச்சல் என்பது கொரோனா தொற்றின் ஒரு முக்கிய விளைவாக உள்ளது. உடலில் எந்தவித அறிகுறி இல்லாவிட்டாலும் இரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவு குறையும்.
இவ்வாறு உயிர்வாயுவின் அளவு குறைந்தால் அது உடலில் பல பாகங்களை பாதிக்கும். சோதனைக்கு பிறகாகவே உயிர்வாயுவின் அளவானது இரத்ததில் இயல்பான எண்ணிக்கையில் உள்ளதா என அறிய முடியும்.
ஆக்ஸிஜன் அளவு மிகக் குறைவான நிலைக்கு சென்றால் மருத்துவமனையில் சிகிச்சைக்கு செல்லலாம் எனவும் இதனை தெரிந்துகொள்ளவே இந்த Oximeter கருவி ஒவ்வொரு வீட்டிற்கும் இலவசமாக வழங்குவதென அறிவித்துள்ளதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.
எங்கே எப்போது வாங்கலாம்?
ஜீலை 3ம் தேதிக்குள் ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு தயாரிக்கப்பட்ட துண்டு பிரசுரம் அனுப்பப்படும் அதனை வைத்து இலவச Oximeter கருவியை பெற்றுக்கொள்ளலாம்.
இதனை நீங்கள் Fairprice, Shengsiong, Giant, Cold stoarage, Watsons, Unity மற்றும் Guardian ஆகிய அங்காடிகளில் பெற்றுக்கொள்ளலாம்.
மேற்கண்ட கடைகளின் அனைத்து கிளைகளும் இலவச கருவி பெறும் மையங்கள் கிடையாது. உங்கள் பகுதியில் எந்த மையத்தில் கிடைக்கும் என்பதை Temasek Foundation நிறுவனத்தின் முகநூல் பதிவில் உள்ள இணையதள முகவரியில் உங்கள் போஸ்டல் எண்ணை (Postal Code) உள்ளீடு செய்து தேடி தெரிந்துகொள்ளலாம்.
இந்த இலவச Oximeter கருவியை ஜீலை.5 முதல் ஆகஸ்ட்.5 வரை மக்கள் பெற்றுக்கொள்ளலாம் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.