சிங்கப்பூர் – புலம்பெயர்ந்த தொழிலாளர் உரிமைக் குழுவின் Humanitarian அமைப்பின் (Home) நிறுவனர் திருமதி பிரிட்ஜெட் டான் இன்று (ஏப்ரல் 18) காலமானார்.
அவருக்கு வயது 73.
இதுகுறித்து Home வெளியிட்ட Facebook பதிவில், “திருமதி டான் பிப்ரவரி 2014 இல் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டதாகவும், பின்னர் அவர் குணமடைந்து Batam-ல் உள்ள non-profit குழுக்களுடன் இணைந்து பணியாற்றி வந்தார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, திருமதி பிரிட்ஜெட் தலைசிறந்த வக்கீலாக விளங்கியவர். புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் போராடியவர். துன்புறுத்தப்பட்டு வெளியேற்றப்பட்ட வீட்டுப் பணியாளர்களுக்கான தங்குமிடம், திறன் பயிற்சித் திட்டங்களை உள்ளடக்கிய Home-ன் தற்போதைய செயல்பாடுகளை நிறுவுவதில் அவர் முக்கிய பங்கு வகித்தார். அதுமட்டுமின்றி, அனைத்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான சட்ட மற்றும் வேலைவாய்ப்பு ஆலோசனை சேவைகளையும் வழங்கி வந்தார்.
பிரிட்ஜெட் வெளிநாட்டு ஊழியர்களின் உண்மையான நண்பராகவும் நம்பிக்கைக்கு உரியவராகவும் இருந்தார். யார் எப்போது எந்த உதவி கேட்டாலும் தயங்காமல் செய்யக் கூடியவர். உதவி தேவைப்படும் பலருக்கு உதவிக்கரம் நீட்டினார்” என்று Home அமைப்பு கூறியுள்ளது.
50,000 க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் மனித கடத்தலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஹோம் அமைப்பு உதவி செய்துள்ளது.
2011 ஆம் ஆண்டில், அப்போதைய அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனிடமிருந்து நவீன கால அடிமைத்தனத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான Hero Acting விருதைப் பிரிட்ஜெட் பெற்றார். மனித கடத்தலுக்கு எதிரான போராட்டத்தில் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
சிங்கப்பூர் வெளிநாட்டு ஊழியர்களுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த இந்த தெய்வத்தின் ஆன்மா இனி நிம்மதியாக உறங்கட்டும்!