TamilSaaga

கோவை – சிங்கப்பூர் : வாரம்தோறும் மூன்று நாட்கள் சேவை – சிங்கப்பூர் Fly Scoot நிறுவனம் அறிவிப்பு

தற்போது சிங்கப்பூர் மற்றும் இந்தியா இடையே பல விமான சேவை நிறுவனங்கள் விமானங்களை இயக்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் சிங்கப்பூரில் Omicron பரவல் அதிகரித்துள்ள காரணத்தால் தற்போது VTL சேவைகள் வழியாக சிங்கப்பூருக்குள் வர தற்காலிக தடையை விதித்துள்ளது சிங்கப்பூர் அரசு. சிங்கப்பூரில் பதிவாகும் புதிய Omicron வழக்குகளில் 70 சதவிகிதம் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு வருபவர்களிடையே தான் காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள் : புதிய Work Pass, Long-Term Pass மற்றும் பல Passக்கு தடுப்பூசி கட்டாயம்

இந்நிலையில் இந்த இக்கட்டான சூழலில் சிங்கப்பூரின் பட்ஜெட் ஏர்லைன்ஸ் நிறுவனமான Fly Scoot தற்போது தமிழகத்தின் கோவை முதல் சிங்கப்பூருக்கு எல்லா வாரங்களிலும் புதன், வெள்ளி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் விமானங்களை இயக்கவுள்ளது.

Fly Scoot TR-541 என்ற விமானம் தான் இந்த சேவையில் ஈடுபடவுள்ளது, மேற்குறிப்பிட்ட நாட்களில் வாரம்தோறும் கோவையிலிருந்து இரவு 11.45 மணியளவில் இந்த விமானம் புறப்பட்டு சுமார் 4 மணிநேர பயணத்திற்கு பிறகு சிங்கப்பூருக்கு காலை 6.25 மணியளவில் சென்றடையும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பயணத்திற்கு Baggage சேர்க்காமல் ஒரு வழி பயணத்திற்கு 6050 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

Fly Scoot வெளியிட்ட அறிவிப்பு

Fly Scoot நிறுவனம் ஹைதராபாத், திருச்சிராப்பள்ளி மற்றும் அமிர்தசரஸ் ஆகிய நகரங்களில் இருந்து 208 டிசம்பர் 2021 முதல் சிங்கப்பூருக்கு விமானங்களை இயக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. திருவனந்தபுரத்திலிருந்தும், கோயம்புத்தூர் மற்றும் விசாகப்பட்டினத்திலிருந்து 29 டிசம்பர் 2021 முதல் விமானங்களை இயக்கவுள்ளது. இவை அனைத்தும் VTL அல்லாத பயண சேவை என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts