TamilSaaga

சிங்கப்பூரில் வெள்ள அபாய எச்சரிக்கை.. அடுத்த ஒரு வாரம் கவனமாக இருக்க வேண்டுகோள் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சிங்கப்பூரில் இன்று (பிப்ரவரி 20) மதியம் பலத்த மழை பெய்ததால், பல பகுதிகளில் திடீர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய நீர் நிறுவனமான PUB, மாலை 4.30 மணியளவில் Upper Paya Lebar சாலையில் நீர் மட்டம் 100 சதவீதம் இருப்பதாக ட்வீட் செய்தது. அதுமட்டுமின்றி அதிக வெள்ள அபாயம் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது.

Choa Chu Kang Avenue 1 க்கும் இதே எச்சரிக்கை விடுக்கப்பட்டது, அங்கு மாலை 4.20 மணியளவில் நீர்மட்டம் 90 சதவீதத்திற்கு மேல் உயர்ந்துள்ளது என்று PUB தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க – “பணி நிமித்தமாக வெளிநாடு பயணம்”.. கண்ணசைவில் Immigration அதிகாரியையே காதலித்து கரம் பிடித்த இந்தியர் – கத்துக்கணும்!

சிங்கப்பூரின் பல பகுதிகளில், குறிப்பாக தெற்கு, கிழக்கு மற்றும் மத்திய பகுதிகளில், பிற்பகலில் கனமழை பெய்யும் என்று PUB முன்னதாகவே அறிவித்திருந்தது.

நாளை (பிப்.21) திங்கட்கிழமை மதியம் மழை மற்றும் புதன்கிழமை இடியுடன் கூடிய மழை பெய்யும் என National Environment Agency தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, வாரம் முழுவதும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஒரு ஆலோசனையில், பிற்பகலுக்கு மேல் தீவு முழுவதும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிங்கப்பூரில் மழை தொடர்பான உடனடி அப்டேட்டுகளுக்கு Tamil Saaga Singapore செய்தித் தளத்தை பின்பற்றலாம்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts