சிங்கப்பூரில் பெய்து வரும் கனமழையால் பல இடங்களில் தீடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 20) காலை பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ள நீரில் சிக்கிய சுமார் 13 வாகனங்களில் இருந்து வாகன ஓட்டிகளையும் சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் பாதுகாப்பாக வெளியேற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பத்தால் காலில் வலி ஏற்பட்ட ஒருவர் உடனடியாக சாங்கி பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மேலும் 5 பேர் அருகிலுள்ள பாதுகாப்பான இடங்களில் பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டனர் என்று சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படை (SCDF) வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மீட்கப்பட்டோர் வந்த வாகனங்கள் Tampines Avenue 10 மற்றும் Pasir Ris Drive 12 சந்திப்பில் நீரில் மூழ்கியதால் நகர முடியவில்லை என்றும் SCDF கூறியுள்ளது. காலை 7.40 மணியளவில் உதவிக்கு அழைப்பு வந்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற SCDF அதிகாரிகள் வாகனங்களில் சிக்கியிருந்த மக்களை காப்பாற்றி அருகில் உள்ள பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து சென்றனர்.
SCDF அதிகாரிகள் வருவதற்கு முன்பே 25 பேர் தங்கள் வாகனங்களை வெளியேற்ற முடிந்தது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.